IVF Treatment: திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு IVF தாய்மை எனும் உன்னதத்தை வழங்க உதவுகிறது.
IVF என்றால் என்ன?
IVF என்பது இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் என்பதன் சுருக்கம் ஆகும். சோதனைக் குழாய் குழந்தை என்பது இதன் பொருள். ஆண்களில் விந்தணுக்களின் தரம் குறைவாக இருந்தாலோ கணவன்-மனைவி உடல் ரீதியாக சந்திக்க முடியாமல் போனாலோ இந்த நடைமுறை உதவும்.

இயற்கையான முறையில் கருத்தரிக்க முயல்பவர்களுக்கு மருத்துவர்கள் முதலில் IUI என்ற முறையை பரிந்துரைப்பார்கள். இது தோல்வியுற்றால் மட்டுமே IVF பரிந்துரை செய்யப்படும்.
இதையும் படிங்க: கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!
IVF சிகிச்சை என்றால் என்ன?
பெண்ணிடமிருந்து முட்டை சேகரிக்கப்படுகிறது. முட்டைகளை சேகரிக்கும் முன், கருப்பையில் இருந்து அதிக முட்டைகளை உருவாக்க ஹார்மோன்களின் ஊசி போடப்படுகிறது. முட்டையின் அளவு அதிகரிக்கும் போது, கருப்பையில் இருந்து யோனி வழியாக முட்டைகள் அகற்றப்படுகின்றன. பின் கணவன் அல்லது நன்கொடையாளர்களிடம் இருந்து விந்து சேகரிக்கப்படுகிறது. இரண்டையும் ஆய்வகத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. இரண்டுமே ஆய்வகத்தில் வைத்து கருவுற்றச் செய்யப்படுகிறது. கருவுற்ற 2 அல்லது 3 கருக்களை யோனி வழியாக கருப்பையில் செருகப்படுகின்றன. இந்த செயல்முறை முடிந்த பின் இறுதி முடிவை பெறுவதற்கு சுமார் ஒரு மாதம் வரை ஆகும்.
IVF முறை முதலில் வெற்றிப் பெறவில்லை என்றால் அந்த பெண்ணின் உடல் வகை மற்றும் பிற காரணிகள் அடிப்படையில் மீண்டும் இதே முறை செய்யப்படுகிறது.
IVF செயல்முறையின் போது வலி இருக்குமா?
கருவுறுதல் மருந்துகள் மனநிலை மாற்றங்கள், தலைவலி, வயிற்று வலி, சூடான ஃப்ளாஷ்கள் மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த நிலையில், பெண்களின் கருப்பைகள் வீங்கி, உடலில் திரவம் கசியலாம். IVF ஊசி பொதுவாக வலியை ஏற்படுத்தாது, சிறிய கூச்ச உணர்வை மட்டுமே உணரலாம். தீவிரமான மற்றும் தாங்க முடியாத வலியை இது ஏற்படுத்தாது. IVF மிகச் சிறியதாகவே இருக்கும், எனவே வலியை உணர அதிக வாய்ப்பில்லை.
IVF செயல்முறை பலருக்கும் ஆரம்பத்திலேயே கைக் கொடுத்துவிடும். சிலருக்கு தோல்வி அடையும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள் கவலைபட தேவையில்லை. IVF உலகின் முடிவல்ல. முறையான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையுடன் மீண்டும் கர்ப்பம் தரிக்க பல வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிங்க: பிரசவத்திற்குப் பிறகு உடல் பலவீனமாக உள்ளதா? உங்கள் பலவீனத்தை பலமாக மாற்ற இதை சாப்பிடுங்கள்
தோல்வியுற்ற சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிக்க மற்ற விருப்பங்களைத் தேடுவதற்கு முன், தோல்வியுற்ற IVF க்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் சிகிச்சையில் என்ன தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிவது, சரியான நடவடிக்கைகளை எடுப்பது வெற்றி விகித்ததை அதிகரிக்கும். எப்போதும் உங்கள் மனநலத்தை மட்டும் நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். முடியாத என்ற ஒன்று இவ்வுலகில் இல்லை அதுவும் குறிப்பாக இந்த தொழில்நுட்ப காலத்தில்.