Hormonal Balance: என்றென்றும் இளமையாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!

  • SHARE
  • FOLLOW
Hormonal Balance: என்றென்றும் இளமையாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!

என்றென்றும் இளமையாக இருக்க சிம்பிள் டிப்ஸ்

ஹார்மோன்கள் என்பது ஒருவகையான இரசாயணம். இது இரத்தத்தின் மூலம் உடல் உறுப்புகளை சென்றடைகிறது. ஒருசில முதியவர்களை பார்த்தால் அவர்கள் வயதானவர்கள் போன்றே தெரியாது. காரணம், அவர்கள் ஹார்மோன்களை சமநிலையோடு வைத்துக் கொள்ள தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டதாகத் தான் இருக்கும்.

இதையும் படிங்க: மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

சமநிலையற்ற ஹார்மோன்

குறிப்பாக பெண்களில் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னையால் செரிமானக் கோளாறு, மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம், பருக்கள், உடல் பருமன், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் ஏற்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

பல பெண்கள் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் பிரச்னை, எடை அதிகரித்தல் என பல்வேறு காரணங்களாலும் நீண்டகாலம் மருந்துகளை பயன்படுத்துவதாலும் சமநிலையற்ற ஹார்மோன்கள் பிரச்னை ஏற்படுகிறது. முறையான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை சரிசெய்யலாம். சில பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலை பிரச்சனையும் நீங்கும். இதுகுறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அறிந்ததே. சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, ப்ரோட்டின், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி என பல வகையான சத்துக்கள் இதில் இருக்கிறது. ஆப்பிள் சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. இதனால் உடலின் செரிமான அமைப்பும் வலுபெறும். இதன்காரணமாக சமநிலையற்ற ஹார்மோன் பிரச்னை சரியாகும்.

மாதுளை

மாதுளையில் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. மாதுளையில் கலோரிகள் மிகவும் குறைவு அதேநேரத்தில் நார்ச்சத்து அதிகம். இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது, செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் குணமாகும். இதன்மூலம் ஹார்மோன் சமநிலை பெறும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. சுவையாக இருப்பதுடன், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. இதில் சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ப்ரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெண்களின் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனையை நீக்குகிறது .

அவகேடோ

அவகேடோ உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சோடியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி என பல வகையான சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இவற்றை உட்கொள்வதன் மூலம், வயிற்றை சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது . அவகேடோவை காலை உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த வழிகள்

பெண்களுக்கு ஏற்படும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனையை பெர்ரிகளை உட்கொள்வதன் மூலமும் சரிசெய்யலாம். இந்த பெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது, அதோடு செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைக்கிறது. பெர்ரிகளில் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி வகைகளை சாப்பிடலாம்.

இதையும் படிங்க: பிரசவத்திற்குப் பிறகு உடல் பலவீனமாக உள்ளதா? உங்கள் பலவீனத்தை பலமாக மாற்ற இதை சாப்பிடுங்கள்

ஹார்மோன் சமநிலையை பராமரிக்க இந்த பழங்களை பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் பரிந்துரை செய்த பின்னரே இந்த பழங்களை உட்கொள்வது நல்லது.

இவை அனைத்தும் பயனுள்ள தகவல் என்றாலும் கூடுதல் அசௌகரிய நிலையை சந்திக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகவது நல்லது.

image source: freepik

Read Next

IVF Treatment: IVF என்றால் என்ன? சிகிச்சை எப்படி செய்யப்படும்? முழு விவரம்

Disclaimer