
$
Hormone Imbalance In Female: ஹார்மோன், நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பராமரிப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இல்லையென்றால் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
ஆண், பெண் இருவருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். ஆனால் இவர்களுக்கான அறிகுறிகளும், காரணங்களும் வெவ்வேறாக இருக்கும். இதனால் பெண்களுக்கு சோர்வு, எடை அதிகரிப்பு, PCOD போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை குறித்து இங்கு விரிவாக காண்போம்.
ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள் (Hormone Imbalance Causes):
பெண்கள் தங்கள் வாழ்வில் பல சூழ்நிலைகளால் ஹார்மோன் சமநிலையின்மையை எதிர்கொள்கிறார்கள். குறிப்பக பருவமடைதல், மாதவிடாய், பிரசவ காலம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற நேரங்களில், பெண்களுக்கு Hormone Imbalance ஏற்படுகிறது. இது தவிர பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மைக்கும் வேறு சில காரணங்களும் உள்ளன. அவை பின்வருமாறு,

ஆரோக்கியமற்ற உணவுமுறை
இன்றைய ஆரோக்கியமற்ற உணவு முறையால், பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மையை எதிர்கொள்கின்றனர். இதனை சரிசெய்ய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: Hormonal Balance: என்றென்றும் இளமையாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!
மன அழுத்தம்
அதிகபடியான மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மையை எற்படுத்துகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், இதில் இருந்து விடுபட உடற்பயிற்சி, தியானம், சுவாசப்பயிற்சி, யோக போன்றவற்றில் ஈடுபடவும். மேலும் புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, சமையல் செய்வது, நடனம் ஆடுவது என உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடவும். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
கருத்தடை மாத்திரைகள்
நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஆகையால் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முன், மருத்துவரின் ஆலோசிக்கவும்.
தைராய்டு
ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்த மருத்துவரை அணுகவும். மேலும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும்.

செயல்பாடுகள் இல்லாமை
உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையை வழிநடத்தும் பெண்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கைமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், கருத்தடை மாத்திரைகள், தைராய்டு, அயோடின் குறைபாடு மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். நீங்கள் ஹார்மோன் சமநிலையின்மை அறிகுறிகளை அனுபவித்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர்கள் உங்களை பரிசோதித்து, உங்களுக்கான தீர்வகளை கூறுவர்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version