Colon Cancer Symptoms: இளம் வயதினரைப் பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளும், காரணங்களும்

  • SHARE
  • FOLLOW
Colon Cancer Symptoms: இளம் வயதினரைப் பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளும், காரணங்களும்

தேசிய புற்றுநோய் நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, பெருங்குடல் புற்றுநோய் இளம் வயதினருக்கு அரிதான ஒன்றாகும். எனினும், இது மூன்றாவது பொதுவான புற்றுநோயாகவும், உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு இரண்டாவது பொதுவான காரணமாகவும் கருதப்படுகிறது. எனவே பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளைக் கண்டறிவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

இந்த புற்றுநோயில் மலக்குடல் புற்றுநோயும் அடங்கும். இது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரக்கூடிய நோயாகும். சில நேரங்களில் பெருங்குடல் அல்லது மலக்குடலில் பாலிப்ஸ் என்ற அசாதாரண வளர்ச்சிகள் உருவாகிறது. இது காலப்போக்கில் பாலிப்கள் புற்றூநோயாக உருவாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cancers And Women: பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் எது தெரியுமா?

பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோயில் உள்ள பாலிப்கள் எப்போதும் அறிகுறிகளை ஏற்படுத்தாது. எனினும், இதன் ஆரம்ப அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிவது நல்லது.

  • குடல் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுவது
  • மலத்தில் இரத்தம்
  • எதிர்பாராத உடல் எடையிழப்பு
  • பலவீனம் மற்றும் சோர்வு
  • வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு

இந்த அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

பெருங்குடல் புற்றுநோயின் காரணங்கள்

இளைஞர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இதில் காணலாம்.

குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். போதுமான நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது பெருங்குடல் புற்றுநோயை வளர்ப்பதற்கான வாய்ப்புடன் தொடர்புடையதாகும்.

உடல் பருமன்

மோசமான உணவுப்பழக்கங்கள் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் அதிகரித்து வருகிறது. அதிக உடல் எடை மற்றும் பருமனாக இருப்பது பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணியாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்

புகைபிடிப்பது

புகைபிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு இருப்பினும், புகைபிடித்தல் இன்றளவும் ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இந்த புகையிலை பயன்பாடு புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகம் மது அருந்துவது

இன்று அதிகளவில் பலரும் மது அருந்துதலில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் ஆல்கஹால் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். மிதமான குடிப்பழக்கமும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

உட்கார்ந்த வாழ்க்கை முறை

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதுடன், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது பல்வேறு நோய் அபாயத்துடன் தொடர்புடையதாகும். இதன் தொடர்ச்சியான தாக்கம் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. இதனைத் தவிர்க்க வழக்கமான உடற்பயிற்சி வலியுறுத்தப்படுகிறது.

how-to-reduce-belly-and-hip-fat-while-sitting

பெருங்குடல் புற்றுநோய் தடுப்பு முறைகள்

  • இளம் வயதினருக்கான பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடிந்தவரை தொடக்கத்திலேயே பின்பற்ற வேண்டும்.
  • அன்றாட வாழ்வில் வழக்கமான உடற்பயிற்சியை சேர்த்துக் கொள்வது உடல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளலாம்.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்குப் பதிலாக மெலிந்த புரத மூலங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.
  • ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இதிலுள்ள பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: symptoms of Cervical Cancer: கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

Image Source: Freepik

Read Next

Cancer Symptoms: பெண்களே.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.. இது புற்றுநோயாக இருக்கலாம்.!

Disclaimer