Doctor Verified

Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்

  • SHARE
  • FOLLOW
Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்

இந்த உணவுப் பழக்க வழக்கங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம். எனவே புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது குறித்து புது தில்லியின் ஆக்ஷன் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஃபரிதாபாத் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையின் மூத்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மணீஷ் ஷர்மா அவர்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய உணவுகள்

உடலில் புற்றுநோய் அபாயத்தைத் தூண்டும் உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, ஸ்டார்ச் போன்ற பொருள்களின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த வகை உணவுகளில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகலாம். மேலும் இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிப்பதால், புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சிவப்பிறைச்சி

இன்று பலரும் சிவப்பிறைச்சியை விரும்பி உண்ணுகின்றனர். ஆனால் இது புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட இறைச்சிகளே புற்றுநோயைத் தூண்டுகிறது. மருத்துவர் மணீஷ் அவர்களின் கூற்றுப்படி, “சிவப்பிறைச்சிகளை சமைக்கும் விதம் மிகவும் முக்கியமாகும். பல நேரங்களில் சமைக்கும் போது சிவப்பிறைச்சியில் தனிமங்கள் உற்பத்தியாகலாம். இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இந்த வகை இறைச்சியில் நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளது. சமைக்கும் போது சூடுபடுத்தும் போது நைட்ரோசமைன் என்ற தனிமத்தை வெளியிடுகிறது. இது பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த பதப்படுத்தப்பட்ட உணவை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது. மாற்றாக, குறைந்த கொழுப்புள்ள இறைச்சியை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Fighting Foods: புற்றுநோயை தடுக்கும் சூப்பட் ஃபுட்ஸ் இதோ..

செயற்கை இனிப்புகள்

எந்த வகையான இனிப்புகளையும் அதிகளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். குறிப்பாக, சர்க்கரை சார்ந்த பானங்கள் மார்பக மற்றும் வயிறு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக அதிகளவு சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிப்பதுடன், இன்சுலின் எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், புற்றுநோய்க்கு சர்க்கரை எந்த அளவுக்குக் காரணம் என்பதை அறிய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது என டாக்டர் மணீஷ் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.

மது அருந்துதல்

போதைப் பொருள்கள் அதிலும் குறிப்பாக மது அருந்துவது உடல் நலத்திற்கு எந்த வித பயனும் இல்லை. அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் பல்வேறு நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். மது அல்லது வேறு வகையான போதைப் பொருள்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்றவை அடங்கும். தினசரி மது அருந்துவது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும் இது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் காரணமாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: எந்தெந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்?

Image Source: Freepik

Read Next

தவறான உணவுப் பழக்கம் இந்த 8 புற்றுநோயை உண்டாக்கும்.!

Disclaimer

குறிச்சொற்கள்