$
Cancer Causing Foods: நல்லா ருசித்து வாழ்வது தான் வாழ்க்கை என்றாலும் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதும் மிக முக்கியம். வளரும் தொழில்நுட்பக் காலத்தில் உணவு முறைகளும் மாறிக் கொண்டே வருகிறது. ஒருசில உணவுகள் உடலுக்கு கேடு விளைக்கும் என நமது மூளை சொன்னாலும் நாக்கும் மனதும் அதை கேட்பதாக இல்லை. ஒருமுறை அதன் சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டால் அது தொடர்கதையாகிவிடும். இப்படி நாம் ருசித்து சாப்பிடும் பல உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்துக்கு எதிராக விளையாடி வருகிறது.
புற்று நோயை உண்டாக்கும் உணவுகள்
அதன்படி சில உணவுகள் புற்று நோயை உண்டாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது என உங்களுக்கு தெரியுமா? அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது 34 வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என சில ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
ஜங்க் ஃபுட் மற்றும் குளிர் பானங்கள்
ஜங்க் ஃபுட் மற்றும் குளிர் பானங்களை அதிகம் உட்கொள்பவர்கள் புற்றுநோயால் இறக்கும் அபாயம் அதிகம் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டனில் 1,97,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். புற்றுநோய் ஒரு கொடிய நோயாகும். புற்றநோயை வயது வித்தியாசம் இல்லாமல் வரத் தொடங்கிவிட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது மிக முக்கியம்.

நீங்கள் நொறுக்குத் தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோயால் இறக்கும் ஆபத்து 6% வரை அதிகரிக்கும். கருப்பை புற்றுநோய் இறப்பு அபாயத்தை 30% வரை அதிகரிக்கிறது. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளால் 34 வகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல்நலக் கோளாறை ஏற்படுத்தும் உணவுகள்
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரஞ்சு பொரியல், சோடா, குக்கீகள், கேக்குகள், இனிப்புகள், டோனட்ஸ், ஐஸ்கிரீம், சாஸ்கள், ஹாட் டாக், தொத்திறைச்சிகள், பேக்கேஜ் செய்யப்பட்ட சூப்கள், உறைந்த பீட்சாக்கள், துரித உணவுகள் மற்றும் வறுத்த உணவுகள் ஆகியவை அடங்கும். இந்த உணவுகளின் சுவையை அதிகரிக்கவும், அதிக நாட்கள் வைத்திருக்கவும் ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் மாவு சதவீதம் அதிகமாக உள்ளது. இவற்றால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவைத் தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் மட்டுமல்ல, உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வறுத்த உணவுகள், ஃபிங்கர் சிப்ஸ், கிரில் சிக்கன், சர்க்கரை-இனிப்பு பானங்கள் இவை அனைத்தும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக மது வகைகள் மற்றும் புகைப்படித்தல், இந்த பட்டியலில் டாப் இடம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. குறிப்பாக, அடர் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். பெர்ரி, இலை கீரைகள், காய்கறிகள் (முட்டைகோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி), பழங்கள் ஆகியவை புற்றுநோய் பாதிப்பை குறைக்கும்.
தானியங்கள்
தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. தானியங்களில் லிக்னான்கள், ஆக்ஸிஜனேற்றிகள், சபோனின்கள் உள்ளன, அவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
நட்ஸ்
கொட்டைகள் சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், பெருங்குடல், கணையம் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றன.
இதையும் படிங்க: தோல் புற்றுநோய்: கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் உணவில் அளவாக தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
image source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version