How to Prevent Lung Cancer : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (World Lung Cancer Day) கொண்டாடப்படுகிறது. இந்த கொடிய நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு பரப்புவதே இதன் முக்கிய நோக்கம். கணைய புற்றுநோயை போலவே நுரையீரல் புற்றுநோயானது மிகவும் ஆபத்தானது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல் படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும் நுரையீரல் புற்றுநோயால் சுமார் 1.8 மில்லியன் மக்கள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக புகைபிடிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிக அளவு பாதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

புற்றுநோயிலிருந்து உங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள எந்த உறுதியான வழியும் இல்லை. இருப்பினும், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சில செயல்முறைகளை மாற்றினால் போதும். அந்தவகையில், நுரையீரல் புற்றுநோய் யாருக்கு வரும்? இதிலிருந்து பாதுகாப்பதற்கான என்ன வழிமுறைகள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : குடல் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்!
நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் ஏற்படுமா?
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நோயாளிகள் புகையிலை அல்லது சிகரெட் பழக்கத்தை உடையவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. நம்மில் பலர் நுரையீரல் புற்றுநோய் ஆபத்து புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் ஏற்படுவதாக நினைக்கிறோம். ஆனால், இந்த சிந்தனை முற்றிலும் தவறு. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10% - 20% பேர் புகைப்பழக்கமே இல்லாதவர்கள் என சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய தேசிய சுகாதார நிறுவனங்களின் (National Institutes of Health - NIH) ஒரு பகுதியாக உள்ள தேசிய புற்றுநோய் நிறுவன ( National Cancer Institute - NCI) புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு, குடும்ப வரலாறு, ரேடான் வாயு ஆகியவை காரணமாக கருதப்படுகிறது. மேலும், புகைப்பழக்கம் இலத்தவர்களிடம் காணப்படும் நுரையீரல் புற்றுநோயில் பல்வேறு துணை வகை செல்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோயில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பது?
புகையிலை பழக்கத்தை கைவிடுதல்
புகையிலை பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கம் ஆகியவை நுரையீரல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும். சிகரெட், பீடி, ஹூக்காக்கள் மற்றும் புகையிலை ஆகியவற்றின் பயன்பாடு சுவாசக் குழாயை சேதமாகும். இதனால், புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்.
காற்று மாசுபாடு

காற்றில் இருக்கும் தூசி, குப்பை, கார் புகை மற்றும் விஷ வாயுக்கள் நுரையீரலை அதிகமாக பாதிக்கும். இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. நகரங்களில் வாழும் மக்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. எனவே, அதிகம் மாசு உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம் : புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க, இதைக் கண்டிப்பாக செய்யுங்கள்!
ரேடான் வாயு உள்ளதா என சரிபார்க்கவும்
ரேடான் என்பது ஒரு கதிரியக்க வாயு ஆகும். இதை நம்மால் பார்க்கவோ அல்லது மணக்கவோ முடியாது. ஆனால், இது புகைபிடித்தலுக்குப் பிறகு நுரையீரல் புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய காரணமாகும். எனவே தான், புகைபிடிக்காதவர்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பாறைகள் மற்றும் மண்ணில் உள்ள யுரேனியம் உடைந்தால் வெளியாகும். இது நீர் மற்றும் காற்று விநியோகத்தில் ஊடுருவி, தரைகள், சுவர்கள் அல்லது அடித்தளத்தில் உள்ள விரிசல்கள் மூலம் உங்கள் வீட்டிற்குள் நுழையலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகளின் நுகர்வு

எண்ணெய் மற்றும் காரமான உணவு, துரித உணவு, பேக்கரி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற ஆரோக்கியமற்ற உணவை அதிகமாக உட்கொள்வதும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான மற்றும் சைவ உணவை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம் : Bladder Cancer: சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

நுரையீரல் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகள் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், மார்பு வலி, சுவாசிபதில் சிரமம், சுவாசிக்கும் போது வலி, இருமும் போது சளியில் இரத்த கசிவு, தலைவலி, நீண்ட நேரம் இருமல், பசியிழப்பு, மார்பில் கனமான அல்லது அடைப்பது போன்ற உணர்வு, திடீர் என உடல் எடை குறைதல், அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகும்.
Image Credit: Freepik