
$
Signs And Symptoms Of Childhood Cancer: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல்வேறு நோய்களை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இளம் வயதில் அல்லது குழந்தை பருவத்திலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். இதில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதில் பெரியவர்களுக்கு ஏற்படும் பல புற்றுநோய்களைப் போலல்லாமல், குழந்தை பருவ புற்றுநோய்கள் வாழ்க்கை முறை அல்லது சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகளுடன் வலுவாக இணைக்கப்படவில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான டிஎன்ஏ மாற்றங்களால் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு அனுப்பப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களின் வகைகள் பெரியவர்களிடமிருந்து வேறுபட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் வகைகள், காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஞ்சி, HCG அப்துர் ரசாக் அன்சாரி புற்றுநோய் மருத்துவமனை, குழந்தை புற்றுநோயியல் மருத்துவர் அபிஷேக் குமார் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Diet: கீமோதெரபியின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே…
குழந்தை பருவ புற்றுநோய்
பெரும்பாலும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. பெரியவர்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அரிதானது எனினும், இந்நிலைமைகள் பலவிதமான நோய்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொன்றும் அதன் சொந்த சிக்கல்களை வழங்குகிறது. இந்நிலைமைகளுக்குப் பங்களிக்கும் அடிப்படைக் காரணிகளைப் புரிந்து கொள்வது ஒரு தொடர் முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், இதற்கு முக்கிய காரணியாக மரபணு முன்கணிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பங்கு வகிக்கிறது.
குழந்தை பருவ புற்றுநோய்களைச் சந்திக்கும் குடும்பங்கள் பெரும்பாலும் இடம்பெயர்கின்றனர். அவர்கள் நிதி, உணர்ச்சி, உடல் ரீதியாக நிதிச்சுமைகளை எதிர்கொள்கின்றனர். இளம் நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கவனிக்கும் வகையில், அவர்களுக்கு சிறந்த விளைவுகளைத் தர ஆரம்பகால கண்டறிதல் மற்றும் விரிவான மேலாண்மை உத்திகள் அவசியமாகக் கருதப்படுகிறது.

குழந்தை பருவ புற்றுநோய்களின் வகைகள்
நியூரோபிளாஸ்டோமா
இது முதிர்ச்சியடையாத நரம்பு செல்களிலிருந்து எழக்கூடிய புற்றுநோயாகும். இது பொதுவாக கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளைப் பாதிக்கிறது.
மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலம் (சிஎன்எஸ்) கட்டிகள்
சிஎன்எஸ் கட்டிகள் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தைப் பாதிக்கும் கட்டிகளாகும்.
லிம்போமாக்கள்
இந்த வகை புற்றுநோய்கள் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா மற்றும் ஹாட்ஜ்கின் லிம்போமா உள்ளிட்ட நிணநீர் மண்டலத்தின் புற்றுநோய்களாகும்.
லுகேமியா
அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) அதாவது இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையின் புற்றுநோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான வகை புற்றுநோயாக
எலும்பு புற்றுநோய்
இது இளம் வயதினருக்கு ஏற்படக்கூடிய பொதுவான புற்றுநோயாகக் கருதப்படுகிறது. இந்த வகை புற்றுநோயில் எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்படுகிறது.
ராப்டோமியோசர்கோமா
இந்த புற்றுநோய் தசை திசுக்களில் எழக்கூடியதாகும். இது பெரும்பாலும் தலை, கழுத்து, சிறுநீர்ப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளையே அதிகம் பாதிக்கிறது.
ரெட்டினோபிளாஸ்டோமா
இது விழித்திரையில் ஏற்படக்கூடிய புற்றுநோயாகும். இது பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலேயே கண்டறியப்படுகிறது.
வில்ம்ஸ் கட்டி
இது சிறுநீரகப் புற்றுநோயின் வகையைச் சார்ந்ததாகும். இந்தப் புற்றுநோயால் 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளிலேயே பெரும்பாலும் காணப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Throat Cancer Symptoms: தொடர்ந்து இருமல் வந்தா தொண்டை புற்றுநோய் இருக்குனு அர்த்தமாம்! மருத்துவர் தரும் விளக்கம் இதோ
குழந்தை பருவ புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
- குழந்தை பருவ புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெளிவானதாக இல்லை. எனினும், இது சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகளால் குறிப்பிடத்தக்க செயல்களை செய்கிறது.
- அதன் படி, லி-ஃப்ரூமேனி சிண்ட்ரோம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்ற நிலைகள் மரபுவழி மரபணு மாற்றங்களால் ஆபத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
- அதே சமயம், பிரசவத்திற்கு முந்தைய வளர்ச்சியின் போது கதிர்வீச்சு மற்றும் சில இரசாயனங்களின் வெளிப்பாட்டாலும் புற்றுநோய் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

குழந்தை பருவ புற்றுநோய்க்கான அறிகுறிகள்
குழந்தை பருவ புற்றுநோய் உண்டாவதற்கான அறிகுறிகள், புற்றுநோயின் வகைகளைப் பொறுத்து பரவலாக வேறுபடுகிறது. இதில் சில அறிகுறிகளைக் காணலாம்.
- தொடர்ச்சியான சோர்வு அல்லது சோம்பல்
- தொடர் வலி
- விகாரமற்ற எடை இழப்பு
- இரத்தப்போக்கு அல்லது எளிதாக சிராய்ப்பு
- அடிக்கடி தொற்றுகள்
- தொடர் காய்ச்சல்
- பார்வை அல்லது கேட்கும் திறனில் மாற்றங்கள்
- தலைவலி
- அடிக்கடி அதிகாலையில் குமட்டல்
- அடிக்கடி தொற்றுகள்
- வீக்கம் அல்லது கட்டிகள் (குறிப்பாக கழுத்து, மார்பு, அக்குள் வயிறு, இடுப்பு)
இந்த பதிவும் உதவலாம்: Brain Cancer: இந்த அறிகுறிகளை புறக்கணிக்கவேக் கூடாது.. மூளை புற்றுநோயாக இருக்கலாம்!
ஆரம்பகால நோய் கண்டறிதலும், சிகிச்சை முறைகளும்
குழந்தை பருவ புற்றுநோய்கள் அதன் இருப்பு மற்றும் வகையைப் பொறுத்து கண்டறியப்படுகின்றன.
- முழுமையான மருத்துவ வரலாறு
- உடல் பரிசோதனை
- இரத்தப் பரிசோதனைகள்
- இமேஜிங் ஸ்கேன்
- பயாப்ஸிகள்
இந்த குழந்தைப் பருவ புற்றுநோய்க்கான ஒவ்வொரு சிகிச்சைத் திட்ட விருப்பங்களும் செயல்திறனை அதிகரிக்கவும் பக்க விளைவுகளை குறைக்கவும் தனிப்பயனாக்கப்படுகிறது. இந்த சிகிச்சை திட்டங்கள் முன்கணிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருப்பங்களில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை போன்றவை அடங்குகிறது.

குறிப்பு
குழந்தை பருவ புற்றுநோய், அச்சுறுத்தும் போது அதனை சரியான நேரத்தில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் நிர்வகிக்கப்படும் ஒன்றாக அமைகிறது. எனவே, இதன் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு, சாத்தியமான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான வழ்க்கை முறையை பின்பற்றுதல் போன்றவை இந்த நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இவ்வாறு மருத்துவ ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள், பல குழந்தை பருவ புற்றுநோய்களின் நோயறிதல் மற்றும் சிகிச்சையைத் தொடர்ந்து மேம்படுத்துகிறது. இது இளம் நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Childhood Cancer Symptoms: ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தை புற்றுநோய் அறிகுறிகள்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version