Parkinson's Disease Causes: பார்கின்சன் நோய் பற்றி தெரியுமா? நோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும் இதோ

  • SHARE
  • FOLLOW
Parkinson's Disease Causes: பார்கின்சன் நோய் பற்றி தெரியுமா? நோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும் இதோ


பார்கின்சன் நோயால் உடலின் தசை இயக்கம் பெருமளவில் பாதிக்கப்படலாம். இந்த நோய் பொதுவான 50 வயதிற்குப் பிறகு மக்களைப் பாதிக்கிறது. 50 வயதுக்குட்பட்டவர்களில் இந்த நோய் காணப்படுவது இளம்பருவ பார்கின்சன் நோய் என அழைக்கப்படுகிறது. இது ஒரு முற்போக்கான நோயாகவும் நரம்பு மண்டலம் மற்றும் நரம்புகளால் பாதிக்கப்படும் உடலின் பாகங்களையும் பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sugar Headache: அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் தலைவலி வருமா? உண்மை இங்கே!

பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகள்

பார்கின்சன் நோய் ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரிவது அரிதே. அதே சமயம், இந்த அறிகுறிகளால் முகத்தில் எந்த விதமான வெளிப்பாடுகளும் தெரியாது. பார்கின்சனின் ஆரம்ப அறிகுறிகளாக, குரல் மென்மையாக மாறலாம். எனினும், காலப்போக்கில் இந்த நிலை முன்னேறுகையில், பார்கின்சன் நோயிற்கான அறிகுறிகள் மோசமடைத் தொடங்கலாம். ஆனால், பார்கின்சன் நோய் எதனால் ஏற்படுகிறது? இந்த நோய்க்கான காரணங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி அறிந்ததுண்டா? இதில் பார்கின்சன் நோய்கான காரணங்கள் மற்றும் இது தொடர்பான முக்கிய தகவல்கள் குறித்து இதில் காணலாம்.

பார்கின்சன் நோய்க்கான காரணம்

பார்கின்சன் நோய்க்கான காரணங்களைக் கண்டறிவதன் மூலம் அதன் அறிகுறிகளைக் குறைக்க முடியும். பார்கின்சனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளில் 60% பேருக்கு ஏற்பட்டதற்கு இடியோபாடிக் அதாவது எந்த காரணமும் இல்லை என்பதைக் குறிக்கிறது. இதில் மீதமுள்ள 40% வழக்குகளில் காரணமாக இருப்பது மரபணு அதாவது குடும்பத்தில் வேறு ஒருவருக்கு இந்த பிரச்சனை இருந்திருப்பதால் வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இது தவிர பூச்சிக் கொல்லிகள் போன்ற சில நச்சுக்கள் பார்கின்சன் நோயைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும் மன நோய்களுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகளை அதிகம் உட்கொள்வதும் பார்கின்சன் நோயை ஏற்படுத்தலாம். இந்த நோய்க்கான காரணங்கள் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதன் அறிகுறிகளை வைத்தே இந்நோயைக் கண்டறிகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Kismis Side Effects: யாரெல்லாம் கிஸ்மிஸ் பழம் சாப்பிடக் கூடாது? நிபுணர்கள் கருத்து

பார்கின்சன் நோயின் அறிகுறிகள்

முதலில் நடுக்கம் போல உருவாகி பிறகு சிறிது சிறிதாக முற்றிலும் பரவி தசைகளின் இயக்கத்தை முற்றிலும் பாதிக்கிறது.

நடுக்கம்

இது பார்கின்சன் நோயின் பொதுவான அறிகுறியாகும். அதிகப்படியான மன அழுத்தம், உடற்பயிற்சி, மருந்துகள் போன்றவற்றால் ஒருவருக்கு சாதாரணமாகவே நடுக்கம் ஏற்படலாம். ஆனால், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியான சூழலிலும் நடுக்கம் ஏற்படலாம்.

வாசனைத் திறன் இழப்பது

பொதுவாக சாதாரண நபர்களுக்கு மூக்கடைப்பின் போதே சரியாக நுகர முடியாத நிலை ஏற்படும். ஆனால், பார்கின்சனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவர்.

மலச்சிக்கல்

உடலில் குறைவான நார்ச்சத்து மற்றும் நீரிழப்பு ஏற்படும் போது மலச்சிக்கல் ஏற்படும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவில் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகலாம்.

சிறிய கையெழுத்து

சிலருக்கு வயதாகும் போது அல்லது ஏதாவது அடிபடும் போது, சரியாக எழுத முடியாத நிலை ஏற்படலாம். ஆனால், நன்றாக எழுதுபவர் இந்நோயால் பாதிக்கப்பட்ட பின், இயல்பானதை விட சிறியதாக எழுதுவர்.

இது போன்ற பல்வேறு அறிகுறிகள் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றும்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Symptoms: வயிற்றில் ஏற்படும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கவே கூடாது!

Image Source: Freepik

Read Next

மக்களே உஷார்! இந்த உணவு உயிருக்கே ஆபத்தாம்: உணவு பாதுகாப்பு துறை அதிரடி

Disclaimer