Ways to reduce risk of parkinson's disease: பார்கின்சன் நோய் என்பது ஒரு நரம்பியல் கோளாறைக் குறிக்கக் கூடியதாகும். இது முதன்மையான இயக்கத்தைப் பாதிக்கக்கூடியதாகும். மூளையில் உள்ள நரம்பு செல்கள், மென்மையான மற்றும் ஒருங்கிணைந்த தசை இயக்கங்களுக்கு சமிக்ஞைகளை கடத்துவதற்குப் பொறுப்பான ஒரு வேதிப்பொருளான டோபமைனை உற்பத்தி செய்கிறது. இந்த பார்கின்சன் நோயானது நரம்பு செல்கள் மோசமடைந்து இறக்கத் தொடங்கலாம். ஆனால், இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது.
மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இந்த பார்கின்சன் நோயைத் தடுப்பதற்கு எந்த உத்தரவாதமான வழியும் இல்லை என்றாலும், சில வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூளை ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் மூலமும், டோபமைன் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இந்த ஆபத்தைக் குறைக்கலாம். அல்லது இந்த பார்கின்சன் நோய் தொடக்கத்தைத் தாமதப்படுத்தலாம். இதில் பார்கின்சன் நோய் ஆபத்தைக் குறைக்க உதவும் சில உதவிக்குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Parkinsons Day 2025: உலக பார்கின்சன் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.?
பார்கின்சன் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும் வழிகள்
மூளைக்கு ஆரோக்கியமான உணவை உண்பது
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நட்ஸ் போன்ற உணவுகள் நியூரான்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மெடிட்டரேனியன் உணவுமுறையானது வீக்கத்தைக் குறைத்து, வாஸ்குலர் மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பார்கின்சனின் அபாயத்தைக் குறைக்கலாம்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது
வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, அதிலும் குறிப்பாக ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை உடற்பயிற்சியானது நியூரோபிளாஸ்டிக் தன்மையைத் தூண்டுகிறது. இவை டோபமைன் சமிக்ஞையை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது பார்கின்சன் அபாயத்தைக் குறைக்கிறது.
காஃபினை அளவாக அருந்துதல்
காபி அல்லது கிரீன் டீ போன்ற மூலங்களிலிருந்து மிதமான காஃபின் உட்கொள்வது பார்கின்சன் நோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. காஃபின் அருந்துவது டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்களைப் பாதுகாப்பதாகவும் மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பதாகவும் கருதப்படுகிறது. எனினும், இதன் சமநிலை முக்கியமானதாகும். ஏனெனில், அதிகப்படியான காஃபின் அருந்துவது சிலருக்கு தூக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் அல்லது பதட்டத்தை அதிகரிக்கலாம்.
மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பது
மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் பார்கின்சன் நோய் அபாயத்தைக் குறைக்கலாம். இதற்கு வாசிப்பு, இசைக்கருவிகளை வாசிப்பது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அல்லது புதிர்களைத் தீர்ப்பது போன்றவற்றின் மூலம் வீழ்ச்சியைத் தாமதப்படுத்தலாம். மனத்தூண்டுதலின் உதவியுடன் அறிவாற்றல் இருப்பை உருவாக்கலாம். இதன் மூலம் பார்கின்சன் போன்ற நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rare Disease Day 2025: அரிய நோய்கள் குறித்து அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்..
போதுமான தூக்கம் பெறுவது
நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் REM தூக்க நடத்தை கோளாறு போன்ற பிரச்சனைகள் பார்கின்சன் நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. எனவே, வழக்கமான தூக்க சுகாதாரத்தைப் பேணுவது, படுக்கைக்கு முன் திரைகள் பார்ப்பதைத் தவிர்ப்பது, தூக்க அட்டவணையை பின்பற்றுவது போன்றவற்றின் மூலம் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை மூளை நச்சு நீக்கம் மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது. இவை இரண்டுமே நரம்பு பாதுகாப்புக்கு முக்கியமானவையாகும்.
நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது
நீரிழப்பு மற்றும் மோசமான குடல் ஆரோக்கியம் இரண்டுமே நரம்பியல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே உடலைப் போதுமான நீரேற்றத்துடன் வைப்பது அவசியமாகும். இதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், குடல்-மூளை அச்சை பராமரிப்பதற்கு யிர், கேஃபிர் மற்றும் புளித்த காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த, புரோபயாடிக் உணவுகளை சாப்பிடலாம். இவை ஆரோக்கியமான நுண்ணுயிரியை ஆதரிப்பதுடன், நரம்பு அழற்சியைக் குறைக்கிறது.
தலையில் காயங்களைத் தவிர்ப்பது
அதிர்ச்சிகரமான மூளை காயங்களால், குறிப்பாக மீண்டும் மீண்டும் தலையில் ஏற்படக்கூடிய காயங்கள் பிற்காலத்தில் பார்கின்சன் நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். எனவே, அன்றாட வாழ்வில் தலையில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான உத்திகளைக் கையாள வேண்டும். இதன் மூலம் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், பார்கின்சன் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
பார்கின்சன் நோய் அபாயத்தைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Parkinson's Disease Causes: பார்கின்சன் நோய் பற்றி தெரியுமா? நோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும் இதோ
Image Source: Freepik