How can I stop acne before my period: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். பொதுவாக, இந்த காலத்தில் அவர்களின் உடலில் பல வகையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன் ஏற்ற இறக்கத்தின் காரணமாக, பல்வேறு உடல்நல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதில் முகப்பருவும் அடங்கும். பெண்கள் பலரும் மாதவிடாய்க்கு முன்பாக, முகத்தில் பருக்கள் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். இது மாதவிடாய்க்கு முந்தைய முகப்பரு என்று அழைக்கப்படுகிறது.
ஹார்மோன் மாற்றம் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிப்பதால், இவை துளைகளை அடைக்கிறது. இதன் காரணமாக முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தோல் எரிச்சல் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. எனினும், இதை முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால், சில இயற்கை குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்த பிரச்சனையைக் குறைக்க முடியும். இதில் ஜெய்ப்பூரில் பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரான மூத்த மருத்துவர் கிரண் குப்தா அவர்கள் மாதவிடாய்க்கு முன் வரும் முகப்பருவை இயற்கையாக குறைப்பதற்கான வழிகளைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: முகப்பரு முதல் முதுமை எதிர்ப்பு வரை.. சருமத்திற்கு வேப்ப எண்ணெய் தரும் அதிசய நன்மைகள் இதோ
மாதவிடாய்க்கு முன் முகப்பருவைத் தடுப்பதற்கான இயற்கையான வழிகள்
சீரான உணவை உட்கொள்வது
பெரும்பாலும் மோசமான உணவு முறை காரணமாகவே, மாதவிடாய்க்கு முன் முகத்தில் முகப்பரு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது உணவு முறை, சரும ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக, சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது காரணமாக இருக்கலாம். எனவே மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் காலத்தில் பருக்கள் வராமல் இருக்க பழங்கள், பச்சை காய்கறிகள், நட்ஸ், முழு தானியங்களை சாப்பிடலாம்.
மேலும் உடலை போதுமான அளவு நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இது தவிர, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, குளிர் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். அதே சமயம், உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், ஆளிவிதைகள் உட்கொள்வதை அதிகரிக்கலாம்.
நன்றாக தூங்குவது
போதுமான தூக்கம் இல்லாததும் சருமத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். போதுமான தூக்கம் வராத போது, சருமத்தை சரிசெய்யும் செயல்முறை குறைந்து, உடலில் வீக்கம் அதிகரித்து பருக்களை ஏற்படுத்துகிறது. எனவே, மாதவிடாய்க்கு முந்தைய பருக்களைக் குறைக்க தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும், தூங்குவதற்கு முன்பாக மொபைல் அல்லது டிவி திரையைத் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கும், விழிப்பதற்கும் சீரான தூக்க அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.
காமெடோஜெனிக் அல்லாத பொருட்களைப் பயன்படுத்துவது
காமெடோஜெனிக் பொருட்கள் துளைகளை அடைத்து, பருக்களின் பிரச்சனையை அதிகரிக்கிறது. குறிப்பாக, மாதவிடாய்க்கு முன்பாக சரும பராமரிப்பு மற்றும் ஒப்பனைப் பொருட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே மாதவிடாய்க்கு முந்தைய பருக்களைத் தவிர்க்க ஃபேஸ் வாஷ், சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்ற காமெடோஜெனிக் அல்லாத பொருட்களைத் தேர்வு செய்யலாம்.
இதைக் கொண்டு மேக்கப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பும் அகற்றிய பின்னும் முகத்தை நன்கு சுத்தம் செய்யலாம். இது தவிர, எண்ணெய் பசை இல்லாத மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்காக தயாரிக்கப்பட்ட சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Back Acne Causes: பெண்களே! முதுகு பருக்கள் ஏற்பட என்னென்ன காரணம் இருக்கு தெரியுமா?
மன அழுத்தத்தைக் குறைப்பது
உடலில் மன அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக, சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளை மேலும் சுறுசுறுப்பாகி முகப்பருவை அதிகரிக்கக்கூடும். பொதுவாக மாதவிடாய்க்கு முன் மன அழுத்தம் அதிகரிப்பது பொதுவானதாகும். ஆனால், இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். எனவே மாதவிடாய்க்கு முன் முகப்பரு பிரச்சனையைக் கட்டுப்படுத்த மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள், ஆழ்ந்த மூச்சை எடுத்து லேசான நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மேலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உங்களுக்குப் பிடித்த வேலையில் நேரத்தைச் செலவிடலாம்.
ஹார்மோன் சமநிலைக்கு மருத்துவரை அணுகுவது
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு முன்பு அதிக பருக்கள் இருப்பின், அது உடலில் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமப்படுத்த கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பல முறை பரிந்துரைக்கின்றனர்.
எனவே மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்தில் முகப்பரு பிரச்சனைகள் அதிகமாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், பருக்கள் தொடர்ந்து அதிகரித்து அல்லது வலிமிகுந்ததாக இருந்தால், ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் அல்லது தோல் நிபுணரை அணுக வேண்டும்.
முடிவுரை
மாதவிடாய்க்கு முன் பருக்கள் பிரச்சனை ஏற்படுவது ஒரு சாதாரண செயல் ஆகும். ஆனால், இதைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியாக இருக்காது. எனவே மாதவிடாய்க்கு முன்போ அல்லது பின்போ முகப்பரு பிரச்சனையால் சிரமப்பட்டால் இந்த இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Period Acne: மாதவிடாய்க்கு முன் முகத்தில் பருக்கள் தோன்றுவது ஏன்? காரணம் இதோ!
Image Source: Freepik