மாதவிடாய் வருவதற்கு முன் சில பெண்களுக்கு தோல் அல்லது பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. இதன் காரணம் என்ன என்று பல பெண்கள் யோசிக்கிறார்கள். இதற்கான விளக்கத்தை மகளிர் மருத்துவர் ராஜேஸ்வரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹார்மோன் மாற்றமே முதன்மை காரணம்
மாதவிடாய் முன் எஸ்ட்ரஜன் ஹார்மோன் திடீர் குறைவு ஏற்படும். இதனால் தோல் உலர்ச்சி, பிறப்புறுப்பில் நுண்ணுயிர் சமநிலையின்மை ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். சில சமயம் லேசான தொற்று (mild infection) கூட காரணமாக இருக்கலாம்.
இவர்களுக்கு அதிக தாக்கம்
PCOS (Polycystic Ovarian Syndrome) கொண்ட பெண்களிடம் ஹார்மோன் மாற்றம் அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு இந்த அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாகவே உணரப்படும்.
பிற காரணிகள்
* Yeast Imbalance காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படலாம்.
* உணர்திறன் கொண்ட சருமத்திற்கு இந்த பிரச்னை ஏற்படலாம்.
* நீண்ட நேரம் pad பயன்படுத்துவதும், அரிப்புக்கு ஒரு காரணம்.
எளிய தீர்வுகள்
இந்த அரிப்பு பொதுவானது. இதை சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார். மருத்துவர் பகிர்ந்த சிகிச்சை வழிகள் இங்கே..
* பிரச்னைக்கு ஏற்ற கிரீம் பயன்படுத்தலாம்.
* புரோபயாடிக் பயன்படுத்தலாம்.
* ஹார்மோன் சமநிலை சிகிச்சை பெறலாம்.
* பிறப்புறுப்பை சுதம் செய்வதன் மூலம், அரிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
* உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு pad-ஐ பயன்படுத்தலாம்.
View this post on Instagram
மருத்துவர் எச்சரிக்கை
“உங்களுக்கு இந்த அரிப்பு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், இது அடிக்கடி நடக்கிறது என்றால், பெண்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், தவறாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இது ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக மட்டுமல்லாமல், தீவிரமான தொற்றுகள் அல்லது பிற உடல் நல பிரச்சனைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும்” என்று மருத்துவர் எச்சரிக்கிறார்.