Back Acne Causes: பெண்களே! முதுகு பருக்கள் ஏற்பட என்னென்ன காரணம் இருக்கு தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Back Acne Causes: பெண்களே! முதுகு பருக்கள் ஏற்பட என்னென்ன காரணம் இருக்கு தெரியுமா?

முதுகில் தோன்றும் பருக்களுக்கு Back Acne அல்லது Bacne எனப்படுகிறது. இதனால் மேல் முதுகு மற்றும் தோள்பட்டை பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த பகுதியிலேயே எண்ணெய் சுரப்பிகள் அமைந்துள்ளது. மேலும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம் காரணமாகவும் இந்த முகப்பரு ஏற்படலாம். இதில் பெண்களுக்கு முதுகில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Tea For Period Cramps: மாதவிடாய் வலிக்கு இந்த 4 ஹெர்பல் டீ குடிங்க போதும்

மாதவிடாய் காலத்தில் முதுகில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

முதுகு பருக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் முதுகு பருக்களின் காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.

ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள்

பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சாதாரணமானதாகும். அதிலும் குறிப்பாக, மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவை மாறுகிறது. மாதவிடாய்க்கு முந்தைய நாள்களில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கலாம். இது சருமத்தின் துளைகளில் அதிகப்படியான எண்ணெயை அடைத்து, முதுகில் முகப்பருவை ஏற்படுத்தலாம்.

வீக்கம்

பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வீக்கம் உண்டாகும். அழற்சியினால் ஏற்படும் வீக்கம் சிவப்பாகவும், வீங்கியதாகவும் காணப்படுகிறது. இவை சருமம் அல்லது இறந்த சரும செல்கள் காரணமாக உருவாகிறது.

வியர்வை

இன்று பலரும் வியர்வை அல்லது அசௌகரியம் காரணமாக வழக்கமான தோல் பராமரிப்பை புறக்கணிக்கின்றனர். இவ்வாறு புறக்கணிக்கும் போது முதுகில் பருக்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். இந்த வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். இதன் மூலம் முகப்பருவைத் தடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Delayed Period: பெண்களே மாதவிடாய் தாமதத்திற்கு இதுதான் காரணமாம்! முழு விவரம் இங்கே!

அதிகப்படியான சரும உற்பத்தி

சருமத்தில் புரோஜெஸ்ட்டிரோன் செபம் என்ற தோல் எண்ணெய் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த எண்ணெய் உற்பத்தியானது இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் கலந்து, சருமத்தின் துளைகளை அடைப்பது மற்றும் முகப்பரு வெடிப்புகளை ஏற்படுத்தும். இதில் ஆண்ட்ரோஜன்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன்கள் சருமத்தின் உற்பத்தியைத் தூண்டுவது, மாதவிடாயின் போது பரு ஏற்பட காரணமாகிறது.

மன அழுத்தம்

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் அதிகரித்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அதிகரித்த மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். இது முகப்பருவை தீவிரமாக்கலாம். மன அழுத்தம் முகப்பருவுடன் நேரடியாக தொடர்புடையதாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழியை மேற்கொள்ள வேண்டும்.

ஆடை தேர்வுகள்

பெண்கள் சுவாசிக்க முடியாத துணிகள் அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவது வியர்வை மற்றும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தலாம். இது பருக்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே சரியான உடைத் தேர்வுகளைக் கையாள்வதன் மூலம் பாக்டீரியா உருவாதலைத் தவிர்த்து, பருக்களைத் தவிர்க்க முடியும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால், பெண்கள் முதுகில் முகப்பருக்கள் ஏற்படலாம். பெண்கள் முடிந்த வரை, இந்த பிரச்சனைகளைத் தவிர்ப்பதன் மூலம் முதுகில் தோன்றும் பருக்களைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Blood Clots During Period: மாதவிடாயின் போது இரத்தம் உறைதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

PCOD Diet: என்னது பிசிஓடி உள்ளவர்கள் பர்கர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Disclaimer