Thu Oct 29, 2026 | 10:47 AM IST

Expert

PCOD Diet: என்னது பிசிஓடி உள்ளவர்கள் பர்கர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

PCOD Diet: என்னது பிசிஓடி உள்ளவர்கள் பர்கர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?PCOD Diet: என்னது பிசிஓடி உள்ளவர்கள் பர்கர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

What to eat on PCOS: பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOD - Polycystic Ovarian Disease) என்பது சில காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று. PCOD-யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனை. சில சமயங்களில் எடை அதிகமாகி, அது தொடர்பான மற்ற பிரச்சனைகள் வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் எடையை எளிமையாக குறைக்கலாம்.

சரியாக சாப்பிடுவது என்றால் பிடித்த உணவுகளை தவிர்ப்பது. பிசிஓடி காரணமாக அதிகரித்து வரும் உடல் எடையால் நீங்களும் சிரமப்பட்டு வந்தால், உங்களுக்குப் பிடித்த உணவை விட்டுவிடுவது கடினமாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு எளிமையான ரெசிபி பற்றி கூறுகிறோம்.

இது உங்களுக்கு ஒரு சிறந்த விருப்பமாக இருக்கும். நீங்கள் ஒரு பர்கர் பிரியராக இருந்தால், இந்த ஸ்பெஷல் பர்கரை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தலாம். ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் காஜல் அகர்வால் இதைப் பற்றி நமக்கு விளக்கியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம் : Delayed Period: பெண்களே மாதவிடாய் தாமதத்திற்கு இதுதான் காரணமாம்! முழு விவரம் இங்கே!

லெட்டூஸ் பர்கர் செய்ய தேவையான பொருட்கள்:

லெட்டூஸ் இலைகள் (Lettuce Leaves)
1 ஸ்பூன் பச்சை சட்னி
1 ஸ்பூன் புளி சட்னி
1-2 வெள்ளரி துண்டுகள்
2 கேப்சிகம் நறுக்கியது
டோஃபு 4 முதல் 5 துண்டுகள்

லெட்டூஸ் பர்கர் செய்முறை:

  • முதலில், லெட்டூஸ் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • இப்போது அதன் மீது பச்சை சட்னி மற்றும் புளி சட்னியை பரப்பவும்.
  • அதன் மேல் இரண்டு வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.
  • நறுக்கிய குடைமிளகாய் கொண்டு அலங்கரிக்கவும்.
  • உங்களுக்கு வெள்ளரி மற்றும் குடமிளகாய் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்க்கலாம்.
  • இப்போது, 4 முதல் 5 டோஃபு துண்டுகளை வைக்கவும். விரும்பினால் சோயாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • வேண்டுமானால் சாட் மசாலாவையும் தூவலாம். இப்போது கீரை இலைகளை நன்றாக மடித்து சாப்பிடவும்.

இந்த பதிவும் உதவலாம் : PCOS பிரச்சினை உள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க முடியுமா? டாக்டர்கள் கூறுவது என்ன?

லெட்டூஸ் பர்கர் எப்படி எடை இழப்புக்கு உதவும்?

இந்த பர்கரின் சிறப்பு என்னவென்றால், அதில் எந்த எண்ணெயும் பயன்படுத்தப்படுவதில்லை. அதே போல, மாவில் செய்யப்பட்ட ரொட்டியும் பயன்படுத்தப்படுவதில்லை. லெட்டூஸ் இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. அதே சமயம் சோடியம், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைந்த அளவில் காணப்படுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வதால் கருவுறுதல் பாதிக்கப்படுமா? உண்மை என்ன?

நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை. அனைத்து வகையான பச்சை காய்கறிகளும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. டோஃபு புரதத்தின் நல்ல மூலமாகும், மேலும் இது பசியைக் கட்டுப்படுத்துகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ Sex After C-Section: சிசேரியனுக்கு பிறகு உடலுறவு வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.