$
Tips To Lose Weight With Hypothyroidism: பொதுவாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையைக் கையாள்வது சவாலான ஒன்றாகும். ஹைப்போ தைராய்டிசம் அதாவது செயல்படாத தைராய்டிசம் இருப்பின், வளர்ச்சிதை மாற்றம் குறைகிறது. நன்றாக சாப்பிட்டாலும், உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடை கூடும். எனினும், சரியான அணுகுமுறியயைக் கையாள்வதன் மூலம் தைராய்டு நிலையை நிர்வகித்து உடல் எடை இழப்பில் ஈடுபடலாம். ஏனெனில் எடை இழப்பு பெரும்பாலும் பயனுள்ள சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்களின் விளைவாகவே பின்பற்றப்படும். ஹைப்போதைராய்டிசத்துடன் உடல் எடையைக் குறைப்பதற்கான சில உதவிக் குறிப்புகளை சிக்னஸ் லஷ்மி மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சஞ்சய் குமார் அவர்கள் விளக்கியுள்ளார்.
ஹைப்போ தைராய்டிசத்துடன் உடல் எடை இழப்பதற்கான வழிகள்
மருத்துவர் சஞ்சய் அவர்களின் கூற்றுப்படி, கீழே குறிப்பிட்ட சில குறிப்புகள் மூலம் ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.
சுகாதார வழங்குநரை அணுகுதல்
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் உடல்நல பராமரிப்பு வழங்குனர் அல்லது உட்சுரப்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று தொடங்க வேண்டும். குறிப்பிட்ட நிலைக்கான சரியா தைராய்டு மருந்து மற்றும் அளவைத் தீர்மானிக்க இது உதவும். ஏனெனில், தைராய்டு ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவது பொதுவான ஆரோக்கியம் மற்றும் உடல் எடைக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பது அவசியமாகும். இந்த ஆலோசனையுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Metabolism Booster For Weight Loss: உடல் எடை குறைய வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்க உதவும் சிறந்த பானங்கள்
சீரான உணவு
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக சீரான உணவுப் பராமரிக்கு மிக முக்கியம் ஆகும். அதன் படி, முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், ஒல்லியான புரதங்கள், அடங்கிய நன்கு சமநிலையான உணவில் கவனம் செலுத்த வேண்டும். தைராய்டு கோளாறுகளில் நிபுணத்துவம் பெற்ற, பதிவு செய்யப்பட்ட உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தனிப்பயனாக்கப்பட்ட உணவுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பகுதிக் கட்டுப்பாடு
ஹைப்போ தைராய்டிசத்தைக் கையாளும் போது, உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகளில் சிறந்த வழி பகுதிக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதாகும். எனவே, அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க, பகுதி அளவில் கவனம் செலுத்தலாம். சிறிய, அடிக்கடி உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், அதிகப்படியான கலோரி நுகர்வுகளையும் தடுக்கிறது.
கலோரி விழிப்புணர்வு
கலோரி உட்கொள்ளலைக் கண்காணிப்பது அவசியமாகும். ஹைப்போ தைராய்டிசம் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குவதால், அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினசரி உட்கொள்ளலைக் கண்காணித்து, உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வேதேச இதழின் படி, தீவிர ஹைப்போ தைராய்டிசம் வளர்சிதை மாற்றத்தில் 50% குறைவை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் எடை குறைவதில் சிரமம் உண்டாகலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது
சர்க்கரை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும். ஏனெனில், இது எடையை அதிகரிப்பதுடன், தைராய்டு அறிகுறிகளை அதிகப்படுத்தும். முடிந்த வரை முழு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

மருந்து இணக்கம்
பரிந்துரைக்கப்பட்ட தைராய்டு மருந்துகளைத் தொடர்ந்து, உட்கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும். இது தைராய்டு நிலை மற்றும் உடல் எடை இரண்டையும் நிர்வகிப்பதில் மேன்மையான முன்னேற்றத்தைப் பெறலாம். பயணத்தின் போதும் மருந்துகளை எடுத்துச் செல்வது அவசியமாகும்.
மன அழுத்த மேலாண்மை
அதிக மன அழுத்தம், தைராய்டு பிரச்சனைகளை அதிகப்படுத்துவதுடன், உடல் எடை இழப்பையும் தடுக்கும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியமானதாகும். ஹைப்போ தைராய்டிசம் உடல் சோர்வு மற்றும் தசை பலவீனத்திற்கு வழிவகுக்கலாம். எனவே உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தவும் முடியும். வழக்கத்தில் உடற்பயிற்சியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்
நீரேற்றத்துடன் இருப்பது
வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் காரணிகளில் நீரிழப்பும் ஒன்று. மேலும், தண்ணீரைத் தக்கவைத்து, உடல் எடையைக் குறைப்பது கடினமாகும். எனவே உடலை நீரேற்றத்துடன் பராமரிக்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.

முன்னேற்றத்தைக் கண்காணிப்பது
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு உடல் எடை இழப்பு மெதுவாக நடக்கலாம். எனவே பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் இருந்து ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாடுகளில் கவனம் செலுத்தலாம். எனவே, தினசரி உணவு உட்கொள்ளல், உடற்பயிற்சி, உடல் எடை போன்றவற்றைத் தவறாமல் கண்காணித்து, ஆரோக்கியப் பராமரிப்பை மேற்கொள்ளலாம்.
ஆதரவில் இணைதல்
மருத்துவர் குமார் அவர்களின் கூற்றுப்படி,”ஆதரவுக் குழுவில் சேர்வது அல்லது சிகிச்சையாளர் அல்லது ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். நாள்பட்ட சுகாதார நிலையைக் கையாள்வது உணர்ச்சி ரீதியாக சவாலாக இருப்பினும், ஆதரவு நெட்வொர்க் இருப்பது உதவியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஒவ்வொருவரின் உடலும் சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட திட்டத்தை உருவாக்க, சுகாதார வல்லுநர்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம். இதில், தைராய்டு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போது, எடை மேலாண்மை காலப்போக்கில் அடையக்கூடியதாக மாறும்.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க
Image Source: Freepik