Cinnamon For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Cinnamon For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க


எடை இழப்புக்கு உதவும் இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையின் சில பண்புகள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

நல்ல கொழுப்பை உருவாக்க

நல்ல கொழுப்பில் பல லிப்பிட் துளிகள் மற்றும் இரும்பு கொண்ட மைட்டோகான்ட்ரியா உள்ளது. இவை உணவை பயன்படுத்தக்கூடிய ஆற்றல் மூலமாக மாற்ற உதவுகிறது. இலவங்கப்பட்டை சாறு உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த

இலவங்கப்பட்டையில் உள்ள பாலிபினால்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் உதவுகிறது. இன்சுலின் சரியான அளவில் உற்பத்தி செய்ய இயலாத போது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உயர்த்தலாம். இது கொழுப்பு அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walking After Eating: இரவு சாப்பிட்ட பின் வாக்கிங் செல்வது உடல் நலத்திற்கு நல்லதா?

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டையை பயன்படுத்துவது எப்படி

உடல் எடையை குறைக்க இலவங்கப்பட்டையை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்

உடல் எடை குறைய இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து பயன்படுத்தலாம். ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடை இழப்புக்கு உதவுவதுடன், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது தோல் தொண்டை பிரச்சனைகள் மற்றும் சைனசிடிஸ் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.

தேவையானவை

  • இலவங்கப்பட்டைத் தூள் – ½ தேக்கரண்டி
  • ஆப்பிள் சைடர் வினிகர் – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை

  • ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சிறிது இலவங்கப்பட்டைத் தூள் சேர்க்க வேண்டும்.
  • பின், அடுப்பை அணைத்து அறை வெப்பநிலையில் தண்ணீரை குளிர்விக்க வேண்டும்.
  • இதில் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

காலை உணவாக இலவங்கப்பட்டை மற்றும் ஓட்ஸ்

இலவங்கப்பட்டை, ஓட்ஸ் இரண்டும் உடல் எடை குறைய உதவும் உணவுப் பொருள்களாகும்.

தேவையானவை

  • இலவங்கப்பட்டை தூள் – ½ தேக்கரண்டி
  • கொழுப்பு இல்லாத பால் – ½ கப்
  • ஓட்ஸ் – ¼ கப்
  • வாழைப்பழத் துண்டுகள் – ½ கப்
  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

  • முதலில் பாலைக் கொதிக்க வைத்து, அதனுடன் ஓட்ஸ் சேர்க்க வேண்டும்.
  • ஓட்ஸ் சாப்பிடும் அளவுக்கு மென்மையாக மாறும் வரை பின் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
  • இதனுடன், வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து இலவங்கப்பட்டைத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் பால்

இரவில் உறங்கும் முன் இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் கலந்த பாலை அருந்துவது, உடல் எடையை விரைவாகக் குறைக்கும்.

தேவையானவை

  • கொழுப்பு இல்லாத பால் – 1 கப்
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை தூள் – ¼ தேக்கரண்டி

செய்முறை

  • கொழுப்பு இல்லாத பாலைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
  • பின், அதில் இலவங்கப்பட்டைதூள் மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: Double Chin Reduce Tips: இரட்டைத் தாடை பிரச்சனை இருக்கா.? அப்ப நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

இலவங்கப்பட்டை டிடாக்ஸ் நீர்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க இலவங்கப்பட்டை டிடாக்ஸ் வாட்டரை அருந்தலாம். புதினாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குடல் பிரச்சனைகள், தோல் பிரச்சனைகள், இருமல், ஒவ்வாமை போன்றவற்றிற்கு தீர்வாகப் பயன்படுகிறது.

தேவையானவை

  • இலவங்கப்பட்டை – 1 அங்குலம்
  • எலுமிச்சை – 4-5 ஆக நறுக்கியது
  • புதினா இலை – 1 கைப்பிடி
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை

  • இலவங்கப்பட்டையை முந்தைய நாளிலேயே தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • பின், காலையில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் நறுக்கிய புதினா இலைகள் மற்றும் எலுமிச்சையைச் சேர்க்கவும். இதனை அருந்தி வர உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Rapid Weight Loss: உடல் எடையை குறைக்க நினைப்போர் கவனத்திற்கு!

இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த டீ

இலவங்கப்பட்டை, தேன், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் ஈ ஆனது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேன் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

தேவையானவை

  • இலவங்கப்பட்டை தூள் – ½ தேக்கரண்டி
  • தேன் – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை

  • ஒரு கப் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் இலவங்கப்பட்டை தூள் சேர்க்க வேண்டும்.
  • பின் தண்ணீரின் அளவு பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து, அதை வடிகட்டவும்.
  • இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் இலவங்கப்பட்டை தேன் டீ தயார். இதனை அருந்தி வர உடல் எடையைக் குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இலவங்கப்பட்டையை மேலே கூறப்பட்ட வழிகளில் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Weight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்க

Disclaimer