Best cooking oil for weight loss: பிஸியான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் மூன்றில் ஒருவர் எடை அதிகரிப்பு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். உடல் எடையை அதிகரிப்பது என்பது எளிமையானது. ஆனால், அதிகரித்த எடையை குறைப்பது என்பது அவ்வளவு லேசான வேலை இல்லை.
அதிகரித்த உடல் எடையை குறைக்க நம்மில் பலர் டயட் குறிப்புகளை பின்பற்றுவோம். இன்னும் சிலர், ஜிம்மிற்கு சென்று வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்வார்கள். ஏனென்றால், உடல் பருமனால் பல்வேறு நோய்களில் அபாயம் அதிகரிக்கும். எளிமையாக கூறினால், மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை அனைத்து பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Wrinkles Reducing Tips: முகச்சுருக்கம் சீக்கிரம் மறைய தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்
உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஏனென்றால் இவை உடல் எடையை எளிமையாக அதிகரிக்கும் என நினைப்பார்கள். ஆனால், எண்ணெயை சரியாக பயன்படுத்தினால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்.
Pubmed இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தொகுப்பில், மற்ற எண்ணெய்களை காட்டிலும் தேங்காய் எண்ணெயின் உதவியுடன் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் உணவில் சமச்சீரான அளவு தேங்காய் எண்ணெயைச் சேர்த்துக் கொண்டால், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள். உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும், இதன் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Coconut Oil Benefits: முடி உதிர்கிறதா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..
தேங்காய் எண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்?

வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த இந்த எண்ணெய், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் எடை அதிகரிப்பைத் தடுக்கும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இருப்பினும், அனைத்து பிராண்டு தேங்காய் எண்ணெய்களும் ஒரே மாதிரியாக இருக்காது. எடை இழப்புக்கு, எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அதில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது மற்றும் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Coconut Oil Cooking: சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா?
MCFA-கள் நம் வயிற்றில் ஜீரணிக்கப்படுவதால், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான், தேங்காய் எண்ணெய் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. தேங்காய் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட பார்கள் மற்றும் பானங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
தேங்காய் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் உணவில் தேங்காய் எண்ணெயை பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்கள் விருப்பப்படி உங்கள் உணவில் சேர்க்கலாம் - காய்கறிகளை வதக்கவும், கூட்டு செய்யவும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- எண்ணெயை அதிகம் சேர்க்க வேண்டாம், 1 அல்லது 2 ஸ்பூன் போதும்.
- உங்கள் காலை டீ அல்லது காபியில் ஒரு துளி எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- சாலட் தயாரிக்கும் போது எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?
ஒரு நாளைக்கு எவ்வளவு தேங்காய் எண்ணெய் சாப்பிடணும்?

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் உணவில் சேர்க்கலாம் என்று அர்த்தமில்லை. ஏனென்றால், தேங்காய் எண்ணெயில் 11 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 2 டேபிள்ஸ்பூன் அல்லது 30 மிலி தேங்காய் எண்ணெயை உட்கொண்டால் போதும். அன்றைய கலோரி அளவைப் பொறுத்து 39 மில்லி எண்ணெய் வரை எடுத்துக்கொள்ளலாம்.
Pic Courtesy: Freepik