$
Coconut Oil Benefits For Hair Growth: அழகு மேம்பாடு என்று வரும்போது கண்டிப்பாக அதில் தேங்காய் எண்ணெய் இடம்பெற்றிருக்கும். மேலும் இது சமையலிலும் சிறந்து திகழ்கிறது. ஆனால் முடி வளர்ச்சி என்று வரும் போது, அதில் தேங்காய் எண்ணெய் தான் முதல் வரிசையில் இருக்கும். தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பல பிராண்டு தேங்காய் எண்ணெய் சந்தையில் கிடைக்கின்றன. அது செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், முடி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும். தேங்காய் எண்ணெயால் முடிக்கு என்ன நன்மை என்று இங்கே காண்போம்.

முடிக்கு வலுவூட்டு
முடி பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் சிறந்து திகழ்கிறது. உங்கள் முடியை வலுவாக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இது இழந்த ஈரப்பதத்தை மீட்டு எடுத்து உங்கள் முடிக்கு புத்துயிர் கொடுக்கும். இதனால் உங்கள் முடி பளபளப்பாகவும், நீளமாகவும் வளரும்.
UV கதிரில் இருந்து பாதுகாப்பு
நீங்கள் வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் UV கதிர்கலால் சேதமடையலாம். இது உங்கள் முடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இந்த நேரத்தில், நீங்கள் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்தாலே போதும். உங்கள் முடி ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: முடி கிடுகிடுன்னு அடர்த்தியாக வளரனுமா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!
வறட்சி நீங்கும்
உங்கள் முடி வறட்சியாக இருந்தால் தேங்காய் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் கலந்து முடியில் தடவவும். இது வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கும். மேலும் முடி உடைவதை நிறுத்தும். குறிப்பாக இது உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகு பிரச்னையில் இருந்து உங்கள் முடியை காக்கும்.
கூந்தலுக்கு பொலிவு தரும்
தேங்காய் எண்ணெய் முடியின் வேர் தண்டுகளின் ஆழமான பகுதிக்கு சென்று, முடி வளர்ச்சியை தூண்டும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள், முடியை ஈரப்பதமாக்கு, முடி வறட்ச்சியை தடுக்கிறது. இதனால் முடி பளபளப்பாகவும், பொலிவுடனும் காணப்படும். இது மந்தமான முடிக்கு புத்துயிர் கொடுக்கிறது.

பொடுகு பிரச்னை இருக்காது
தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் தலையில் உள்ள பொடுகை முற்றிலும் போக்குகிறது. தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி மயிர்கால்களில் படும் அலவுக்கு மசாஜ் செய்யவும். இது தலையில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது. இதனால் முடி உதிர்வு கட்டுப்படும். மேலும் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் தோல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், உங்கள் முடியில் எதையாவது முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: Freepik