உங்களுக்கு முடி பிரச்னை உள்ளதா ? முடி வளரவில்லையா? அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? உங்களைப் போலவே பலர் இதே போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்னைகள் பல காரணங்களால் எழுகின்றன.
மோசமான உணவு பழக்கம், தூக்கமின்மை, மாசுபட்ட சூழல், மரபணு காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் முடி உதிர்தல் பிரச்னையில் இருந்து விடுபட, கூந்தல் மீண்டும் வலுவாக இருக்க கீழே விவரிக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றினால் போதும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலையுடன் இதைச் செய்யுங்கள்..
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை கலந்து தடவி வந்தால், முடி உதிர்தல் பிரச்னைக்கு நல்ல பலனைத் தரும். இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். எண்ணெய் நன்றாகக் கொதித்ததும் வடிகட்டவும்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
இந்த வடிகட்டப்பட்ட எண்ணெயை இரவில் தலைமுடிக்கு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் உச்சந்தலையில் தடவினால் முடி வலுவடையும். இரவில் முடியாவிட்டால் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் எண்ணெய் தடவி ஷாம்பு போட்டு கழுவினால் போதும்.
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வெள்ளை முடி, முடி உதிர்தல் போன்ற பல பிரச்னைகளில் இருந்தும் விடுபடுகிறது.
கறிவேப்பிலை உணவின் சுவையை மட்டுமே நன்றாகவும் வாசனையாகவும் மாற்றும் என்று நினைப்பது தவறு. முடி பராமரிப்பில் இது மிகவும் முக்கியமானது. கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, சி, புரதங்கள், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால்தான் கறிவேப்பிலையை கூந்தல் பராமரிப்பின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image Source: Freepik