முடி கருகருனு, தரையைத் தொடும் அளவுக்கு வளர ஆம்லாவுடன் கறிவேப்பிலை சேர்த்து இப்படி சாப்பிடுங்க

Amla and curry leaves juice benefits for hair: ஆம்லா, கறிவேப்பிலை இரண்டுமே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டுமே முடிக்கு ஊட்டமளிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவையாகும். இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஆம்லா, கறிவேப்பிலை தரும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு அன்றாட உணவில் சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முடி கருகருனு, தரையைத் தொடும் அளவுக்கு வளர ஆம்லாவுடன் கறிவேப்பிலை சேர்த்து இப்படி சாப்பிடுங்க

Benefits of amla and curry leaves for hair: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி உதிர்தல், நுனிமுடி பிளவு, முடி வறட்சி உள்ளிட்ட பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயன்படுத்துவது கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்.

உண்மையில், முடிக்கு வெளியில் வாங்கும் சில பொருள்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், உடலின் உள்ளிருந்தே ஆரோக்கியமான முடியை ஊக்குவிப்பது மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆம்லா, கறிவேப்பிலை இரண்டுமே தலைமுடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதை முடிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். எனினும், இதை அன்றாட உணவில் சேர்ப்பது முடிக்குக் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.

ஆம்லா, கறிவேப்பிலை தலைமுடிக்கு எவ்வாறு உதவுகிறது?

ஆம்லா மற்றும் கறிவேப்பிலை ஆனது உச்சந்தலை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடியை வேர் முதல் நுனி வரை வலுப்படுத்தவும் உதவுகின்றன. இவை முடியின் ஆரோக்கியத்திற்கு தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கறிவேப்பிலை சட்னி தெரியும்! கறிவேப்பிலை ஊறுகாய் தெரியுமா? இப்படி செஞ்சி பாருங்க மிச்சமே இருக்காது

முடிக்கு கறிவேப்பிலை தரும் நன்மைகள்

புரதம் நிறைந்த கறிவேப்பிலை

தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. இந்நிலையில், கறிவேப்பிலை உடலுக்கு முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அத்தியாவசிய புரதங்கள் மற்றும் நொதிகளை வழங்குவதன் மூலம் கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது.

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

கறிவேப்பிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பூஞ்சை காளான் கலவைகள் போன்றவை தலைமுடியில் காணப்படும் நச்சுகளை வெளியேற்றி, குவிவதைத் தடுக்க உதவுகிறது. இது உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

முடி உதிர்தலைக் குறைக்க

கறிவேப்பிலையில் அமினோ அமிலங்கள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன. இவை இரண்டும் முடி உதிர்தலைத் தடுக்கவும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க

கறிவேப்பிலை, முடியில் மெலனினை மீட்டெடுக்க உதவுகிறது. எனவே இதை எடுத்துக் கொள்வதன் மூலம் முடி முன்கூட்டியே நரைப்பதை மெதுவாக்கலாம். இது அடர்த்தியான, பளபளப்பான முடியை வழங்குவதற்கு உதவுகிறது.

முடிக்கு நெல்லிக்காய் தரும் நன்மைகள்

வைட்டமின் சி நிறைந்த

பெரும்பாலான சிட்ரஸ் பழங்களை விட ஆம்லாவில் அதிகளவிலான வைட்டமின் சி உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடி வலிமையையும் நெகிழ்ச்சித்தன்மையையும் பராமரிக்கிறது.

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

ஆம்லாவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியான பண்புகள் உள்ளது. இது அரிப்பு, பொடுகு மற்றும் பொதுவான உச்சந்தலை எரிச்சலைக் கையாள்வதற்கு சிறந்ததாகும்.

இந்த பதிவும் உதவலாம்: ஆம்லா டூ செம்பருத்தி.. முடி காடு மாறி அடர்த்தியா வளர உதவும் ஐந்து மூலிகைகள் இங்கே

முடியை உள்ளிருந்து பலப்படுத்த

இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவையாகும். இவை முடி செல்களை தினசரி சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், வலுவான மற்றும் பளபளப்பான முடியைப் பெறலாம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

ஆம்லாவில் உள்ள இரும்புச்சத்துக்கள், முடி நுண்ணறைகளைச் சுற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையை அடைவதை உறுதி செய்து ஆரோக்கியமான வேர்கள் மற்றும் விரைவான முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.

உணவில் ஆம்லா மற்றும் கறிவேப்பிலையை எவ்வாறு சேர்ப்பது?

மூலிகை தேநீர்

ஆம்லா மற்றும் கறிவேப்பிலையை துண்டுகளாக்கி, தண்ணீரில் சிறிது மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த மூலிகை பானத்தை காலை மற்றும் இரவில் படுக்கும் முன் குடிக்கவேண்டும். இது இனிமையான, நச்சு நீக்கும் பானமாக மட்டுமல்லாமல் தலைமுடி மற்றும் செரிமானத்திற்கும் சிறந்ததாகும்.

ஸ்மூத்தியில் சேர்ப்பது

கீரை, வாழைப்பழம் மற்றும் ஆளி விதைகளுடன் காலை ஸ்மூத்தியில் ஒரு சிறிய துண்டு நெல்லிக்காய் மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்க்கலாம். இது நீண்ட மற்றும் வலுவான முடியைத் தர உதவுகிறது.

சாதம் தயாரிப்பது

கடுகு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது பொடியுடன் எளிமையான மற்றும் சுவையான கறிவேப்பிலை சாதத்தை தயார் செய்யலாம். இதை வழக்கமான உணவுகளுடன் இணைப்பதன் மூலம், நீண்ட மற்றும் வலுவான கூந்தலைப் பெறலாம்.

கறிவேப்பிலை, ஆம்லா சாறு

10-12 கறிவேப்பிலை, 1 ஆம்லா, இஞ்சி சிறிதளவு, சீரகம் மற்றும் உப்பு போன்றவற்றைச் சேர்த்து சாறு தயாரித்து காலையில் அருந்தலாம். இது சிறந்த நச்சு நீக்கும் பானமாகும். மேலும் இது முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த வழிகளில், ஆம்லா மற்றும் கறிவேப்பிலையை தங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும். எனினும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: தினமும் ஏன் கட்டாயம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடனும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

கடுகு எண்ணெய் vs தேங்காய் எண்ணெய்.. எது கூந்தலுக்கு அதிக நன்மை பயக்கும்.?

Disclaimer