Ways To To Drink Amla Juice For Hair Growth: இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வறண்ட முடி, முடி உதிர்வு மற்றும் இன்னும் சில முடி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு சந்தையில் கிடைக்கும் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கலந்திருக்கும் இரசாயனங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. இதற்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமைகிறது. நெல்லிக்காயை நேரடியாக உட்கொள்வது தலைமுடி மற்றும் சருமத்திற்கு சிறந்த மற்றும் இயற்கையான தேர்வாகக் கருதப்படுகிறது. அதன் படி, தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஆம்லாவிலிருந்து தயார் செய்யப்படும் சூப்பரான பானம் உதவுகிறது. இது குறித்து உணவியல் நிபுணர் ரிச்சா கங்கானி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் விரிவாகக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
ஆம்லாவின் ஊட்டச்சத்துக்கள்
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதிலுள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mango Leaves For Hair: முடி நீளமா, அடர்த்தியா வளரணும்னா மா இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க
ஏன் ஆம்லா டிரிங்க்?
உணவியல் நிபுணர் டயட்டீஷியன் ரிச்சா அவர்கள் தனது பதிவில் இந்த தீர்வைத் தானாகவே முயற்சித்ததாகக் கூறினார். இந்த பானத்தை அருந்துவதன் மூலம் 30 நாட்களுக்குள் தனது தலைமுடியை 2 அங்குலமாக வளர்க்க முடிந்ததாகக் கூறியுள்ளார். மேலும், இந்த பானத்தைத் தொடர்ந்து குடித்து வர, தலைமுடி நன்றாக வளர்வதுடன், முடி உதிர்வு பிரச்சனைகளிலிருந்து நிவாரணத்தைத் தந்ததாகக் கூறினார். மேலும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை அருந்துவது மிகுந்த நன்மை பயக்கும். இந்த பானத்தைத் தொடர்ந்து 30 நாட்கள் அருந்துவது முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.
ஆம்லா பானம் தயார் செய்யும் முறை
- ஆம்லா பானத்தைத் தயார் செய்வதற்கு முதலில் 3 முதல் 4 ஆம்லாவுடன் சில கறிவேப்பிலைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, இஞ்சி துண்டுகளின் தோலை நீக்கி தனியாக வைக்க வேண்டும்.
- இப்போது இந்த மூன்று பொருள்களுடன், வறுத்த சீரகம் மற்றும் கருப்பு உப்பைச் சேர்க்க வேண்டும்.
- இப்போது தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
- இது தலைமுடி மற்றும் சருமத்திற்கு சிறந்த பானமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Oiling: பொடுகு பிரச்சினை இருக்கும் போது முடிக்கு எண்ணெய் தடவலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
தலைமுடிக்கு ஆம்லா தரும் நன்மைகள்
- நெல்லிக்காயை இந்த வழியில் உட்கொள்வது தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
- நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலில் இருந்து முடியை பாதுகாப்பதுடன், பொடுகு தொல்லையையும் நீக்குகிறது.
- நெல்லிக்காயை சாப்பிடுவது உச்சந்தலை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உச்சந்தலை அரிப்புகளைக் குறைக்கிறது.
- மேலும் முடி முன்கூட்டியே நரைக்கும் அபாயத்தைத் தவிர்க்கிறது.
- நெல்லிக்காயை உட்கொள்வது முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துவதுடன், முடி வேகமாக வளர உதவுகிறது.

இவ்வாறு தலைமுடிக்கு ஆம்லா கொண்டு தயாரிக்கப்படும் பானத்தை அருந்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Butter For Hair: வறண்ட கூந்தலால் அவதியா? மென்மையான கூந்தலுக்கு வெண்ணெயை யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik