Does oiling hair increase dandruff: இன்றைய காலகட்டத்தில் கூந்தல் பிரச்சனை சாதாரணமாகிவிட்டது. தலைமுடியை பராமரிக்காததும், தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையும் தான் காரணம். நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள் முடியை வெகுவாக பாதிக்கிறது. குறிப்பாக, பொடுகு முடி உதிர்வுக்கு பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது. பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிய விஷயம் அல்ல.
பொடுகு பிரச்சனை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும். பொடுகு காரணமாக, உச்சந்தலையில் அரிப்பு உணரப்படுகிறது. பொடுகுத் தொல்லை காரணமாக, செதில் போன்ற தோல் உச்சந்தலையில் குவியத் தொடங்குகிறது. இதையே பொடுகு என கூறுகிறோம். பொடுகு காரணமாக, மயிர்க்கால்கள் பலவீனமடைந்து, முடி விரைவாக உடைந்துவிடும். பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட, நாம் பல்வேறு வகையான முயற்சிகளை செய்திருப்போம்.
இந்த பதிவும் உதவலாம் : Dandruff Treatment: பொடுகு தொல்லையால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்க ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
ஆனால், எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் பொடுகுக்கு சிகிச்சையளிப்பதற்கு எண்ணெய் தடவும் செயல்முறையை செய்வார்கள். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் பொடுகு பிரச்சினை குறையுமா? என்பது குறித்து ஓம் ஸ்கின் கிளினிக்கின் மூத்த ஆலோசகர் மற்றும் தோல் மருத்துவர் டாக்டர் தேவேஷ் மிஸ்ரா கூறியவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொடுகு இருக்கும் போது முடிக்கு எண்ணெய் தடவலாமா?

தலையில் பொடுகு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று வறண்ட ஸ்கால்ப். உச்சந்தலை வறண்டு போகும் போது, தலையில் எண்ணெய் தடவுவது முடிக்கு நல்லது. ஆனால், பொடுகு இருந்தால் தலையில் எண்ணெய் தடவக்கூடாது.
எண்ணெய் காரணமாக பொடுகுத் துகள்கள் உச்சந்தலையிலும் முடியிலும் ஒட்டிக்கொள்கின்றன. எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில், பொடுகு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். எண்ணெய், இறந்த சரும செல்கள் சேர்ந்து, உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அரிப்பு ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Rice Water for Dandruff: பொடுகு தொல்லை நீங்க அரிசி கழுவிய நீரை இப்படி பயன்படுத்துங்க!
பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

பொடுகு இருந்தால் எண்ணெய் தடவக் கூடாது என்பதல்ல. எண்ணெய் தடவினால், முடியில் ஈரப்பதம் தங்கி, உச்சந்தலையில் வறட்சி ஏற்படாது. ஆனால், பொடுகு பிரச்சனை இருந்தால், ஒரு வாரத்தில் தினமும் எண்ணெய் தடவுவதற்கு பதிலாக, 1 முதல் 2 நாட்களுக்கு மட்டும் உங்கள் தலையில் எண்ணெய் தடவவும்.
பொடுகுக்கு எதிராக உங்களுக்கு உதவும் எண்ணெயைத் தேர்வு செய்யவும். உதாரணமாக, பொடுகுக்கு சிகிச்சையளிக்க, ஆம்லா அல்லது வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்பட வேண்டும். இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
பொடுகிலிருந்து விடுபடுவது எப்படி?
பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். சாத்தியமானால், பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைக் கொண்டு தினமும் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையைக் கழுவுவது, உச்சந்தலையில் எண்ணெய்த் தன்மையைக் குறைக்க உதவும்.
பொடுகைக் கட்டுப்படுத்த வெந்தயம் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டு வைத்தியங்களை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த வைத்தியம் உச்சந்தலையின் வறட்சிக்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Dandruff Treatment: பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இந்த 3 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!
- பொடுகு பிரச்சினை இருந்தால் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை அடிக்கடி கழுவ வேண்டும்.
- அடிப்படை நடவடிக்கைகள் இருந்தபோதிலும் பொடுகு தொடர்ந்தால், அடுத்த கட்டமாக பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும்.
- உங்கள் ஹேர் பிரஷ்கள் மற்றும் சீப்புகளை சுத்தமாக வைத்திருங்கள் மற்றும் பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகள் பரவாமல் தடுக்க மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.
Pic Courtesy: Freepik