$
Home Remedies For Dandruff And Hair Fall: இன்றைய காலக்கட்டத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பொருட்கள் நம் தலைமுடியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும், முடி பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை. முடி பிரச்சனைகளை சமாளிக்க புதிய தயாரிப்புகளை பயன்படுத்துவதில் நீங்கள் சோர்வாக இருந்தால், சில எளிய வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் பெறலாம்.

பொடுகு நீங்க வீட்டு வைத்தியம் (Home Remedies For Dandruff):
* உங்களுக்கு பொடுகு பிரச்னை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெய் தடவுங்கள். யூகலிப்டஸ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை நீக்கும். யூகலிப்டஸ் எண்ணெயை தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து தடவுவது இன்னும் சிறப்பாக அமையும்.
* எலுமிச்சை சாறை தயிருடன் சேர்த்து தலையில் தடவ வேண்டும். இதனை சிறிது நேரம் ஊற வைத்த பின் முடியை அலசினால், பொடுகு தொல்லை நீங்கும்.
இதையும் படிங்க: Water in Winter: குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் என்ன ஆகும்?
* பொடுகு பிரச்னை தீர வேப்ப எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். இது தோலில் ஏற்படும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையை பாதுகாக்கவும் இது உதவும்.
* வெந்தய விதையை இரவு முழுவதும் ஊற வைத்து, காலை அதனை அறைத்து தலையில் மாஸ்க் போட்டு கொள்ளவும். சிறிது நேரம் கழித்து முடியை அலசவும். இது பொடுகை நீக்க உதவும்.
முடி உதிர்வதை தடுக்க வீட்டு வைத்தியம் (home remedies for hair fall)
* முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க, நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி முடி உதிவை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல் பிரச்சனையை தவிர்க்கலாம்.

* ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவடும். இதில் உள்ள அலெற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் முடியை உதிராமல் தடுக்கும்.
* செம்பருத்தி பூவை கடுகு எண்ணெயுடன் சூடாக்கி, தலையில் மசாஜ் செய்யவும். இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள்
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், புதிதாக ஏதேனும் முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகவும்.
Image Source: Freepik