பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை ஒரு சிறந்த நிவாரணி என்பது உங்களுக்குத் தெரியுமா?
குளிர்காலத்தில் (Winter), சருமத்தின் ஈரப்பதம் குறைவதால் வறட்சி அதிகரிக்கிறது. இதனால் தலையில் பொடுகு உருவாவதோடு, இதனை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக மாறுகிறது.
பொடுகு தொல்லை என்பது வெறும் சரும பிரச்சனையாக மட்டுமின்றி தனிநபரின் தன்னம்பிக்கையை சிதைக்கக்கூடிய விஷயமாகவும் உள்ளது. மேலும் முடியின் வேர்கள் வலுவிழந்து, உதிரத் தொடங்குகின்றன. பூஞ்சை தொற்றுகளாலும் பொடுகு பிரச்சனைகள் ஏற்படலாம்.

குளிர்காலத்தில் பல சமயங்களில் பொடுகுத் தொல்லை அதிகரித்து, அது தொடர்ந்து தலையில் இருந்து விழ ஆரம்பித்து “நான் இங்கே தான் இருக்கிறேன்”என்பதை அனைவருக்கும் அப்பட்டமாக காட்டா ஆரம்பிக்கும். இதனால் பல நேரங்களில் தர்ம சங்கடமாக மாறுகிறது.
நீங்களும் பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால், சில விஷயங்களை மனதில் வைத்து, சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும். இது விரைவில் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.
எலுமிச்சை சாறு:
பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். தேங்காய், ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்றாக தடவவும். மேலும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். இதேபோல் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யவும்.
இது தவிர, அரை எலுமிச்சை சாற்றை தண்ணீரில் பிழிந்து, உங்கள் தலைமுடியைக் கழுவவும். இதனால் உங்கள் பொடுகு பிரச்சனை விரைவில் நீங்கும்.
ஆப்பிள் சைடர் வினிகர், முல்தானி மாட்டி:

காலங்காலமாக முல்தானி மாட்டி முடியை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட, ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த முல்தானி மாட்டியைக் கொண்டு தலையை அலசவும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் பொடுகு விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
வெங்காய சாறு:

வெங்காய சாறு பல முடி எண்ணெய்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பொடுகுத் தொல்லையை நீக்க, வெங்காயச் சாற்றைத் தடவி, தலையைக் கழுவுவதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்கு முன் மசாஜ் செய்யவும். இது பொடுகை நீக்குவது மட்டுமின்றி முடி உதிர்தலையும் படிப்படியாக குறைக்கும்.
இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்:
பொடுகு பிரச்சனை இருந்தால், ஒரே இரவில் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவாதீர்கள்.
மேலும், உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெயைத் தடவினால், உச்சந்தலையில் ஈரப்பதம் இருக்கும்.
சருமத்தை உள்ளே இருந்து நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இதற்குப் பிறகும் பிரச்சனை தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
Image Source: Freepik