கோடைக்காலத்தில், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்:
பொடுகு (Dandruff): வெப்பத்தால் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பு, பொடுகு உருவாக்கத்தை அதிகரிக்கலாம்.
எண்ணெய் அதிகரிப்பு (Oily Scalp): ஈரப்பதம் மற்றும் வெப்பம், தலையில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து, கூந்தலின் தோற்றத்தை பிசுபிசுப்பானதாக மாற்றக்கூடும்.
சன் பர்ன் (Sunburn): உச்சந்தலையில் நேரடி சூரிய ஒளி படுவதால் சருமத்தில் எரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படும்.
பூஞ்சை வளர்ச்சி (Fungal Infections): வியர்வை மற்றும் ஈரப்பதம், உச்சந்தலையில் பொடுகை மட்டுமல்ல பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இதனால் தலையில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
முடி உதிர்தல் (Hair Fall): தலையின் ஆரோக்கிய குறைவு மற்றும் வெப்பத்தால் முடி வேர்கள் பலவீனமடைந்து, முடி உதிர்தல் அதிகரிக்கலாம்.
இந்த சிக்கல்களைத் தவிர்க்க, தினந்தோறும் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் என்னவென பார்க்கலாம்...
சூரியனிடம் இருந்து பாதுகாப்பு:
வெளியில் செல்லும் முன், தலையில் SPF 30-50 கொண்ட ஸ்ப்ரேவை பயன்படுத்தி, குறிப்பாக முடியின் மேல் பாகத்திற்கு நன்றாக அடித்துவிடுங்கள். இது சூரியனின் UV கதிர்வீச்சுக்களால் கூந்தல் சேதமடைவதையும், உச்சந்தலை பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.
உச்சந்தலையைக் குளிர்விக்க:
0.5-1 சதவீம் மெந்தால் அல்லது பெப்பர்மின்ட் எண்ணெய் கொண்ட ஷாம்பூவைப் பயன்படுத்தி, தலையை 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் 20-25°C வெப்பநிலையில் தண்ணீரால் கழுவுங்கள். இது உச்சந்தலைக்கு குளிர்ச்சியையும் சுத்தத்தையும் வழங்கும்.
கூந்தலை அலசும் முன்பு கவனம்:
கோடை காலத்தில் சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தி, வாரத்தில் 2-3 முறை கூந்தலை நன்றாக அலசுங்கள். இது தலையில் சேரும் வியர்வை, எண்ணெய், மற்றும் அழுக்குகளை நீக்கி, தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இது ரொம்ப, ரொம்ப முக்கியம்:
ஷாம்பு கொண்டு தலையை நன்றாக அலசிய பிறகு, 1-2 சதவீதம் வரை ஹயாலுரோனிக் ஆசிட் அல்லது அலோவேரா ஜெல் கொண்ட சீரமைப் பயன்படுத்தி, தலையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை வழங்கி, உலர்ச்சியைத் தவிர்க்க உதவும்.
கிளன்சிங்:
வாரத்திற்கு ஒரு முறை, 1-2% சாலிசிலிக் ஆசிட் கொண்ட முடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி உச்சந்தலையில், 5-10 நிமிடங்கள் ஷாம்பூவால் கழுவுங்கள். இது தலையில் சேரும் இறந்த செறிவுகளை நீக்கி, பொடுகை குறைக்க உதவும்.
Image Source: Freepik