Lemon For Hair: எலுமிச்சை சாற்றை முடிக்கு பயன்படுத்துவது நல்லதா? - உண்மையை அறிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Lemon For Hair: எலுமிச்சை சாற்றை முடிக்கு பயன்படுத்துவது நல்லதா? - உண்மையை அறிந்து கொள்ளுங்கள்!

ப்ளீச்சிங்:

எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இதன் காரணமாக, முடியின் கருப்பு நிறத்தை குறைக்கிறது. இது இயற்கையான முடி நிறமூட்டும் முகவராக செயல்படுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையான ப்ளீச் மற்றும் ஆக்ஸிஜனேற்ற முகவராக செயல்படுகிறது.

குறிப்பாக வெயிலில் செல்லும் போது. அதாவது எலுமிச்சம் பழச்சாற்றை தலைமுடியில் தேய்த்து சூரிய ஒளி படும் போது முடியின் நிறம் அதன் கருமையை இழக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சை சாற்றை பொன்னிற மற்றும் வெளிர் பழுப்பு நிற முடிக்கு சிறந்தது. இது போன்ற நிறமுள்ள முடியின் நிறம் குறைந்தாலும் பெரிய வித்தியாசம் தெரியாது. ஆனால் நல்ல கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற முடிகளில் இது ந்ல்ல வித்தியாசத்தை உருவாக்குகிறது.

முடி நரைக்குமா?

எலுமிச்சை சாற்றில் தண்ணீர் சேர்த்து தடவினால் தலைமுடி பளபளப்பாகும். லெமன் எசன்ஷியல் ஆயிலை முடிக்கு தடவுவது நல்லது. ஆனால் ஷாம்பூவில் வைட்டமின் சி மாத்திரைகள் சேர்க்கப்படுவது முடியை ப்ளீச்சிங் செய்யும். ஆனால் இதனால் முடி நரைக்கும் என்று கூறுவது உண்மையல்ல.

முடியின் கருமையை குறைக்கும் என்று வேண்டுமானல் கூறலாம். கூந்தலுக்கு சற்றே நிறமாற்றத்தை கொடுக்க விரும்புவோர், எலுமிச்சை சாற்றை தடவிக்கொண்டு சூரிய ஒளி படும்படி நின்றால் நிற மாற்றம் அடையும். இது இயற்கையான ப்ளீச்சிங்காக அமைகிறது.

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு:

  • எலுமிச்சை சாறு பல முடி பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. பொடுகு சிகிச்சைக்கு இது மிகவும் நல்லது. குறிப்பாக செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்ற நிலைக்கு சிறந்த சிகிச்சையாகும்.
  • உச்சந்தலையில் இருந்து வறட்சி, தோல் உரிதல், பொடுகு போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
  • உங்கள் தலைமுடிக்கு பளபளப்பு சேர்க்க இது ஒரு முக்கியமான வழியாகும். ஆனால் எலுமிச்சை சாற்றுடன் சற்றே நீர் கலந்து தடவ வேண்டும்.

இதையும் படிங்க: Glowing Skin Tips: குளிர்காலத்துலயும் சருமம் ஜொலிக்க இத ஃபாளோ பண்ணுங்க!

எலுமிச்சை சாற்றை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

  • எலுமிச்சை சாற்றை கூந்தலுக்கு பயன்படுத்துவது முற்றிலும் விளைவுகளை ஏற்படுத்தாது எனக்கூற முடியாது. இது சிலருக்கு தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.
  • குறிப்பாக எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவதால் உச்சந்தலை வறட்சி ஏற்படலாம்.
  • வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அதில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெல் சிலருக்கு அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவும் முன்பு, புருவத்தில் பேட்ச் டெஸ்டர் அல்லது உடலில் கை, கால்களில் உள்ள முடி மீது பரிசோதித்து, விளைவுகள் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தவும்.

Image Source: Freepik

Read Next

Coconut Oil Benefits: முடி உதிர்கிறதா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்