டல்லான சருமம் ஒரே நாளில் பளீச்சென மாற; அழகுக் கலை நிபுணரின் சூப்பர் ஃபேஷியல்!

How effective is lemon on the face: அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும். குறிப்பாக முகத்தில் உள்ள கருமையை போக்க பலரும் ஃபேஷியல், ப்ளீச்சிங் செய்கிறார்கள். 
  • SHARE
  • FOLLOW
டல்லான சருமம் ஒரே நாளில் பளீச்சென மாற; அழகுக் கலை நிபுணரின் சூப்பர் ஃபேஷியல்!


Rubbing lemon on face is good or bad: அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும். குறிப்பாக முகத்தில் உள்ள கருமையை போக்க பலரும் ஃபேஷியல், ப்ளீச்சிங் செய்கிறார்கள்.

அழகு நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக , வீட்டிலேயே இந்த சீசனுக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து ஃபேஷியல் செய்ய முடியும். இப்போது சுலபமாக கிடைக்கும் எலுமிச்சை பழத்தை வைத்து ஃபேஷியல் சொல்லி தருகிறார், அழகுக்கலை நிபுணர் விஜயலஷ்மி.

எலுமிச்சை ஃபேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள கருமை உடனடியாக நீங்குவதோடு, எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. எலுமிச்சை ஃபேஷியலை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.

 

 

image

How effective is lemon on the face

எலுமிச்சை ஃபேஷியல் :

  • முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, காட்டனைக் கொண்டு முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும்.
  • பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். பின் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து, காட்டனை இக்கலவையில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
  • சிறிதளவு ஆலிவ் ஆயிலை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவை முகத்தில் தடவி 2 நிமிடம் விரல்களால் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • பின் இந்த க்ரீம்மை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யவும். பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.
  • இறுதியில் 2-3 அன்னாசி துண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த எலுமிச்சை ஃபேஷியலை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, முகம் நன்கு பொலிவோடும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

image

How effective is lemon on the face

எலுமிச்சையில் உள்ள சருமத்திற்கான நன்மைகள்: (Lemon Facial Benefits)

  • எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. குறிப்பாக எலுமிச்சை உங்கள் நிறத்தை பிரகாசமாக்கும்
  • முகப்பரு வடுக்கள் அல்லது சூரியனால் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படும் ஹைப்பர் பிக்மென்டேஷனை போக்க உதவும்
  • எலுமிச்சை சாறு சரும துளைகளை இறுக்கவும், எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் உதவும்
  • எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம், அவை முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிகிச்சையளிக்க உதவும்

கவனமாக இருங்கள்: (Lemon facial side effects)

  • எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது மற்றும் சருமத்தை எரிச்சலூட்டும், குறிப்பாக உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவுவதற்கு முன் எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.
  • உங்கள் தோலில் எலுமிச்சையைப் பயன்படுத்திய பிறகு நேரடியாக சூரிய ஒளியைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் சருமத்தை UV கதிர்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும்.
  • ஹைட்ரோகுவினோன் அல்லது கோஜிக் அமிலம் கொண்ட மேற்பூச்சு கிரீம்கள், லேசர் மற்றும் கெமிக்கல் பீல் சிகிச்சைகள் போன்ற சருமத்தை ஒளிரச் செய்வதற்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள விருப்பங்கள் உள்ளன.
  • வைட்டமின் சி சீரம் குறைந்த எரிச்சலுடன் அதிகபட்ச நன்மைக்காக நிலைப்படுத்தப்பட்ட வைட்டமின் சியின் குறிப்பிட்ட அளவை வழங்குகிறது

Read Next

Winter Skincare Routine: குளிர்காலத்தில் வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தை எவ்வாறு பராமரிப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்