Benefits of rubbing ice cube on face daily in summer: கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. ஆம். கோடை வெப்பத்தினால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு, புண்கள், வடுக்கள், சரும வறட்சி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இது போன்ற பிரச்சனைகளைக் கையாள்வதற்கு நாம் ஒரு சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றலாம்.
அவ்வாறு கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் ஐஸ் ஃபேஷியல் அமைகிறது. இதில் கோடையில் ஐஸ் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர் ஜெய ரூபா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Ice Facial Benefits: வெயில் காலத்தில் சருமம் ஜில்லுனு இருக்க ஐஸ் ஃபேஷியல் செய்யுங்க
ஐஸ் ஃபேஷியல் என்றால் என்ன?
இன்று நடிகைகள் பலரும் முகத்திற்கு ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் இது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முகத்திற்கு ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்தி தேய்ப்பது சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், முகப்பருவால் ஏற்பட்ட எரிச்சல், சிவந்த தழும்புகள் போன்றவற்றிற்கும் ஒரு அருமையான, இயற்கையான நிவாரணியாக விளங்குகிறது. இன்று பல பிரபலங்களும், பொதுமக்களும் தினசரி முக பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். குளிர்ந்த நீரில் முகத்தை சில வினாடிகள் மூழ்க வைக்கும் இந்த சிகிச்சையானது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
கோடையில் ஐஸ் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஐஸ் தண்ணீரை சருமத்தில் உள்ள ரத்த நாளங்களை உடனடியாக சுருங்கச் செய்கிறது. இதன் விளைவாக, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தலாம். இது முகத்தை பளபளப்பாக வைத்திருப்பதுடன், நாள் முழுவதும் ஜொலிக்க வைக்கிறது. ஆம். குளிர்ந்த நீரில் முகத்தை நனைப்பதால், உடலில் இயற்கையாக உள்ள ஒரு உயிர்வாழும் பொறிமுறை தூண்டப்படுகிறது. மேலும் இது இதயத் துடிப்பை மெதுவாக்குகிறது. இதன் மூலம் பதட்டம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளைத் தணிக்கிறது. இது ஒரு வித அமைதியான மற்றும் சாந்தமான உணர்வைத் தருகிறது.
மருத்துவரின் கூற்றுப்படி, கோடைக்காலத்தில் ஐஸ் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
- முகத்தின் நிறம் ஒட்டுமொத்தமாக ஒத்துப்போவதைக் குறிக்கிறது
- மனதை அமைதியாக்குவதற்கு இதயத்துடிப்பின் ரிலாக்ஸ் செயல்பாடு
- முகத்தில் வீக்கம் மற்றும் கண்ணரிப்பு குறைவது
- இளமை தோற்றம் மற்றும் சரும பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிப்பது
- மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மன அமைதியைத் தருகிறது
இந்த பதிவும் உதவலாம்: Ice Cube For Face: முகத்திற்கு ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்வது நல்லதா?
ஐஸ் ஃபேஷியலை எப்போது செய்யலாம்?
- அழற்சி தோல் பிரச்சினைகள் உள்ள போது ஐஸ் ஃபேஷியல் செய்யலாம்.
- அதிக முக வீக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தலாம்.
- ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகத்தில் வீக்கம் தெரியும் போது ஐஸ் ஃபேஷியலைப் பயன்படுத்தலாம்.
- அழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஐஸ் ஃபேஷியல் பயன்படுத்தலாம்.
- அதிகமாக எண்ணெய் சுரக்கும் சரும வகை உள்ளவர்களுக்கு சிறந்ததாகும்.
ஐஸ் ஃபேஷியல் செய்வது எப்படி?
- பாத்திரம் ஒன்றில் சுத்தமான குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்க்க வேண்டும்.
- இதில் முகத்தை 30 வினாடிகள் வரை முழுவதும் மூழ்க வைக்க வேண்டும்.
- இதை தினமும் காலை நேரத்தில் செய்யலாம்.
- ஒரு நாளில் 3–4 முறை வரை, சிறிதளவில் முயற்சி செய்யலாம்.
- மேக்கப் செய்யும் முன் அல்லது நல்ல உறக்கம் இல்லாத காலங்களில் இது சிறந்தது.
குறிப்பு
சருமத்திற்கு ஐஸ் ஃபேஷியல் பயன்படுத்துவது நன்மை பயக்கும். எனினும் வறண்ட சரும பிரச்சனை கொண்டவர்கள், தோல் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக அழுத்தம் அல்லது மனபாதிப்பு உள்ளவர்கள் ஐஸ் ஃபேஷியலைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை நாடுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: மணப்பெண் போல ஜொலிக்கணுமா? தினமும் காலையில் முகத்தை இந்த தண்ணீரில் க்ளீன் பண்ணுங்க
Image Source: Freepik