Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Expert

இரவில் முகத்தில் ஐஸ் கட்டிகளை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. இதோ அதன் நன்மைகள்! நிபுணர் சொன்னது

இரவு நேரத்தில் சருமத்தில் ஐஸ் தடவுவது பல்வேறு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இதில், இரவில் முகத்தில் ஐஸ் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. சருமத்தில் எரிச்சல், அரிப்பு, தடிப்புகள், பருக்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்ற முதுமை சார்ந்த அறிகுறிகள் போன்ற பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே தான், நமது சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. பொதுவாக, நாம் வயதாகும்போது, நமது சருமத்தில் நீரிழப்பு ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரும்பாலும், வயதானதும் சருமத்தின் பளபளப்பை இழக்கச் செய்கிறது. மேலும் சிறிய பிரச்சனைகள் கூட தெரிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்தில் ஐஸ் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்கி அதன் அமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், முகத்தில் ஐஸ் தடவும்போது, முகப்பரு பிரச்சனைகள் குறையத் தொடங்குகின்றன. அது மட்டுமல்லாமல், முகம் கறையின்றி பளபளப்பாகத் தோன்றும். எனினும், முகத்தில் ஐஸ் தடவும் நேரமும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. உதாரணமாக, காலையில் ஐஸ் தடவுவது இரவு நேர வீக்கத்தைக் குறைக்கிறது. அதே சமயம், இரவில் ஐஸ் தடவுவது தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சரும பராமரிப்பு முதல் மன ஆரோக்கியம் வரை.. கோடையில் ஐஸ் கியூப் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இதில், டெல்லி, அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை, தோல் மருத்துவம், மூத்த ஆலோசகர், மருத்துவர் சந்தீப் அரோரா அவர்கள், இரவில் சருமத்தில் ஐஸ் தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இரவில் முகத்தில் ஐஸ் தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

தோல் மருத்துவர் டாக்டர் சந்தீப் அரோரா அவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் தடவுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இவ்வாறு சருமத்தில் ஐஸ் தடவுவது வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைத்து, முகத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது துளைகளை இறுக்குகிறது. இதனுடன் சருமத்தில் அழுக்கு மற்றும் எண்ணெய் எளிதில் நுழைவதைத் தடுக்கிறது. மேலும், பருக்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

அது மட்டுமல்லாமல், இரவில் முகத்தில் ஐஸ் தடவுவதால் இரத்த ஓட்டம் மேம்படும். இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது மற்றும் சோர்வு தோற்றத்தைக் குறைக்கிறது. மேலும், கண்களுக்குக் கீழே வீக்கம் இருந்தால், கருவளையங்கள், சொறி போன்றவை இருந்தால், அந்தப் பகுதியில் ஐஸ் பயன்படுத்துவது, அவற்றை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், மேக்கப் பயன்படுத்துவதற்கு முன்பாக அந்தப் பகுதியில் ஐஸ் தேய்ப்பது சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ice Facial Benefits: வெயில் காலத்தில் சருமம் ஜில்லுனு இருக்க ஐஸ் ஃபேஷியல் செய்யுங்க

இரவில் முகத்தில் ஐஸ் தடவுவது எப்படி?

இரவில் முகத்தில் ஐஸ் தடவுவதற்கான சரியான வழியைக் குறித்து காணலாம்.

  • முகத்தில் ஐஸ் பயன்படுத்துவதற்கு முன்பாக, லேசான கிளென்சரைப் பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவி உலர்த்த வேண்டும்.
  • பின், ஐஸ் கட்டிகளை ஒரு பருத்தி துணியில் சுற்றி, உங்கள் கன்னங்கள், நெற்றி மற்றும் தாடையின் ஓரங்களில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யலாம்.
  • பிறகு, உங்கள் முகத்தில் ஐஸ் தடவும்போது, அதை நீண்ட நேரம் வைத்திருக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், ஐஸ் தடவிய பிறகு முகத்தை ஈரப்பதமாக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல்அல்லது லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். இது சரும அமைப்பை மேம்படுத்தி பளபளப்பாக்குகிறது.

குறிப்பு

இந்த வழிகளில் ஐஸ்கட்டியை சருமத்தில் பயன்படுத்தலாம். எனினும், இதை முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஐஸ் கட்டியை எப்போதும் சுத்தமான துணி அல்லது பருத்தியில் சுற்றி வைக்க நினைவில் கொள்வது அவசியமாகும். ஏனெனில் குளிர்ந்த ஐஸ்கட்டி சிவத்தல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மேலும், வாரத்திற்கு 2-3 முறை ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது மலிவான ஆனால் பயனுள்ள தோல் பராமரிப்பு முறையாகக் கருதப்படுகிறது.

எனினும், சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது குளிர்ந்த நீர் பயன்படுத்துவதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் எனக் கருதுபவர்கள், இந்த முறையைக் கையாள்வதற்கு முன்பாக, கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் 2 நிமிடன் முகத்துக்கு ஐஸ் மசாஜ் கொடுங்க.. முதல் நாளே பலன் தெரியும்.!

Image Source: Freepik

Read Next

உங்க மேக்கப் பொருள்களிலிருந்து இந்த 5 பொருள்களை உடனே ஒதுக்கி வையுங்க.. சருமத்திற்கு ஆபத்து..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 16, 2025 22:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content