What happens if you rub an ice cube on your lips: சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இந்நிலையில், கருப்பு உதடுகள் பிரச்சனையால் மக்கள் அடிக்கடி சிரமப்படுகின்றனர். உதடுகள் கருமையாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். லிப்ஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்துவது, புகைபிடிப்பது, உடலில் தண்ணீர் அல்லது இரத்தம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், முதலில், முடிந்தவரை உடலில் நீரேற்றமாக இருப்பது முக்கியமாகும்.
பின்னர் இயற்கையாகவே உதடுகளின் நிறத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், கருப்பு உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றலாம். இத்தகைய வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக உதடுகளில் ஐஸ் தடவுவது அடங்கும். ஆனால், இது உண்மையில் வேலை செய்கிறதா? அது எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து டெர்மபுரிட்டிஸ் துணைத் தலைவர் லலிதா ஆர்யா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Pink Lips: உங்க உதடு கருப்பா இருக்கா? இளஞ்சிவப்பு உதட்டை பெற 1 துண்டு பீட்ரூட் போதும்!
ஐஸ் தடவுவது கருப்பு உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாறுமா?
பலர் உதட்டிற்கு ஐஸ் தடவுவது நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர். இது நிறமியைக் குறைப்பது மட்டுமல்லாமல், உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றவும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இளஞ்சிவப்பு உதடுகளைப் பெறுவதற்கான இந்த வீட்டு வைத்தியம் உண்மையில் வேலை செய்கிறது. உதடுகளில் ஐஸ் தடவுவது நிறமியை ஒளிரச் செய்து இறந்த செல்களை அகற்ற உதவுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கிறது. எனினும், இது பெரும்பாலும் குறுகிய காலம் நீடிக்கலாம். அதாவது இதைப் பயன்படுத்துவதன் மூலம் உதடுகள் சில நாட்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அதன் பிறகு அதன் நிறம் மீண்டும் கருப்பாக மாறக்கூடும். எனினும், ஐஸ் தடவுவது உதடுகளின் சருமத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
கருமையான உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக்க ஐஸ் எவ்வாறு உதவுகிறது
கருப்பு நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதற்கு ஐஸ் பல வழிகளில் செயல்படுகிறது.
- முதலாவதாக, இது உதடுகளின் தோலை உரிக்கச் செய்கிறது. மேலும் இது ஐஸ் மேற்பரப்பு வறட்சியைக் குறைக்க உதவுகிறது.
- இது உதடுகளின் நிறத்தை ஒளிரச் செய்கிறது. எனினும், உதடுகளில் வீங்கியிருந்தால் ஐஸ் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும்.
- இது உதடுகளுக்கு நிவாரணம் அளிப்பதுடன், உதடுகளை அழகாக மாற்றுவதற்கு உதவுகிறது.
- ஐஸ் பயன்பாடு உதடுகளில் காணப்படும் இறந்த சரும செல்களை நீக்கி, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துகிறது.
- இது தவிர, இளஞ்சிவப்பு உதடுகளுக்கு நீரேற்றம் மிகவும் முக்கியமானதாகும். எனவே உதடுகளில் ஐஸைப் பயன்படுத்தும்போது, அது நீரேற்றத்தை அளித்து, இளஞ்சிவப்பு நிறமாகத் தோன்ற உதவுகிறது.
உதடுகளில் ஐஸ் தடவுவது எப்படி
- உதடுகளில் ஐஸ் தடவுவதற்கு, நாம் செய்ய வேண்டியவை என்னவெனில், ஒரு சுத்தமான பருத்தி துணி ஒன்றை நனைத்து, அதில் ஐஸ் கட்டியை வைத்து, அதை உதடுகளில் தேய்க்க வேண்டும்.
- இவ்வாறு உதடுகளில் தேய்க்கும் போது, உதடுகளின் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- இது தவிர, வீட்டிலேயே தேன் ஐஸ் கட்டிகள் அல்லது வெள்ளரிக்காய் ஐஸ் கட்டிகளை உருவாக்கி, உதடுகளில் தேய்க்கலாம். இவை உதடுகளின் இறந்த செல்களை அகற்றவும், உதடுகளின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Tips: உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
இளஞ்சிவப்பு நிற உதட்டைப் பெற உதவும் பயனுள்ள வைத்தியங்கள்
டெர்மாபுரிட்டீஸில், ரசாயன உரித்தல் மற்றும் 4D கிளியர் லிஃப்ட் போன்ற மென்மையான ஆனால் பயனுள்ள உதடு சிகிச்சைகள் மூலம் இளஞ்சிவப்பு நிற உதட்டைப் பெறலாம். இவை பாதுகாப்பானது மற்றும் ஊடுருவாதவை ஆகும். மேலும் இது நீண்ட கால உதடு புத்துணர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகள் உதடு நிறத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உதட்டின் சருமம் உள்ளிருந்து உரிந்து ஊட்டமளிக்கிறது.
மேலும், தினசரி பராமரிப்புக்காக, எப்போதும் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு நீரேற்றத்துடன் இருப்பது, SPF உடன் லிப் பாம் பயன்படுத்துவது போன்ற வைத்தியங்களை மேற்கொள்ளலாம். ஆனால் நிபுணர் ஆலோசனையுடன் அவற்றை இணைப்பதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான, பிரகாசமான உதடுகளைப் பெற முடியும்.
குறிப்பு
ஐஸ் பயன்படுத்துவது உதடுகளுக்கு நன்மை தருவதாக இருப்பின், இவற்றை அதிகம் பயன்படுத்துவது உதடுகளை உலர்த்தும், நிறமி மற்றும் மந்தநிலையை மோசமாக்கலாம். எனவே ஐஸ்கட்டி பயன்படுத்துவது தற்காலிக பருமன் அல்லது சிவப்பிற்கு விரைவான தீர்வாக இருப்பினும், இது உதடு பராமரிப்புக்கு நீண்டகாலத் தீர்வாக இருக்காது.
எனினும், ஐஸ்கட்டி பயன்பாட்டைத் தவிர, தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளைப் பெறலாம். இவை உடலில் இரத்த அளவை அதிகரிப்பதன் மூலம் உதடுகளை இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, உதடுகள் நீரேற்றமாக இருக்கவும், அவற்றின் நிறம் அப்படியே இருக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பான உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற இந்த ஐந்து பொருள்கள் மட்டும் யூஸ் பண்ணுங்க!
Image Source: Freepik