Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Dandruff Treatment: பொடுகு தொல்லையால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்க ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

Home Remedies to Get Rid of Dandruff Naturally: ஆணாக இருந்தாலும் சரி… பெண்ணாக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக இது சாத்தியமில்லாமல் மாறிவிட்டது. நேரமின்மை காரணமாக முடியை சரியாக பராமரிக்க முடிவதில்லை. எனவே, முடி உதிர்வு, பொடுகு, அரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.

குறிப்பாக இந்த பிரச்சினையை ஆண்களை விட பெண்களே சந்திக்கின்றனர். நீங்களும் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தால், இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு ஒரே வாரத்தில் பொடுகு பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Egg For Hair: முட்டையால் முடி உதிர்வை தடுக்க முடியுமா?

பொடுகு ஏற்படுவதற்கான காரணம்

எண்ணெய் பசையுள்ள ஸ்கால்ப்பில் அழுக்கு படிவதே இதற்குக் காரணம். இதனால் மட்டுமே பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இது தவிர, தலைமுடியை அதிகமாக கழுவும் போது, ​​முடியில் பொடுகு ஏற்படுகிறது. சரியான கால இடைவெளியில் கூந்தலை சுத்தம் செய்யாமல் இருந்தாலும் ஆளுக்கு மற்றும் தூசுகள் முடியில் படிந்து பொடுகு உருவாகும்.

இந்த பதிவும் உதவலாம் : Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.

பொடுகு பிரச்சினைக்கான வீட்டு வைத்தியம்

  • இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  • இப்போது அதில் 4 ஸ்பூன் சர்க்கரையை கலக்கவும்.
  • பிறகு அதில் 2-3 சொட்டு பெப்பர்மின்ட் ஆயில் சேர்க்கவும்.
  • பின்னர், அதில் 2-3 சொட்டு டீ ட்ரீ ஆயில் சேர்க்கவும்.
  • இப்போது இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் உங்கள் தலை முடியை இரண்டாக பகிரவும். இப்போது, இந்தக் கலவையை கைகளின் உதவியுடன் உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
  • நீங்கள் அதைப் பயன்படுத்தும் போது, ​​முடி ஈரமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலர்ந்த உச்சந்தலையில் இதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
  • இதற்குப் பிறகு, 7-8 நிமிடங்கள் தலைமுடியில் அப்படியே விடவும்.
  • பின்னர் முடியை மென்மையான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இதை பயன்படுத்தவும்.

இந்த பதிவும் உதவலாம் : Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.

இதன் நன்மைகள் என்ன தெரியுமா?

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இது முடி அரிப்புகளைத் தடுக்கிறது. பெப்பர்மின்ட் ஆயில் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் டீ ட்ரீ ஆயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகு பிரச்சனையில் இருந்து சில நாட்களிலே உங்களுக்கு நிவாரணம் தரும்.

Pic Courtesy: Freepik

Read Next

Egg For Hair: முட்டையால் முடி உதிர்வை தடுக்க முடியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content