Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.

  • SHARE
  • FOLLOW
Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.

இது போன்ற கூந்தல் பிரச்சனைகளிலிருந்து விடுபட, பல்வேறு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். இதில் கூந்தலுக்கு முட்டை ஆலிவ் ஆயில் நன்மைகள் மற்றும் அதை தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி தாறுமாறா கொட்டுதா? முருங்கை இலையை இப்படி பயன்படுத்துங்க.

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஊட்டச்சத்துகள்

முட்டையில் புரதம், வைட்டமின் ஏ, மற்றும் ஈ, கால்சியம், பொட்டாசியம், செலினியம், மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடியின் வலிமைக்கு அவசியமான ஒன்றாகும். மேலும் முட்டையில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இது முடியைப் பலப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம் முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதுடன், முடி உதிர்வு மற்றும் முன்கூட்டியே முடி நரைத்தல் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க் நன்மைகள் (Egg Olive Oil Hair Mask Benefits)

தலைமுடி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

முடி உதிர்வைக் குறைக்க

இந்த ஹேர் மாஸ்க் பயன்பாடு முடியை அடர்த்தியாக வைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், மற்றும் முட்டையில் உள்ள புரோட்டீன்கள் முடிவளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும்.

முடி வறட்சியைத் தடுக்க

பொதுவாக ஹேர் மாஸ்க் பயன்பாடு முடியை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது முடிக்கு இயற்கையான மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது. மேலும், தலைமுடிக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், முடி வறட்சியை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Winter Hair Care: குளிர்காலத்தில் முடி ரொம்ப வறண்டு போகுதா? இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க.

பொடுகு தொல்லையைப் போக்க

தலைமுடியில் பொடுகு இருப்பது, முடியை வலுவிலக்கச் செய்வதுடன், உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு சிறந்த தீர்வாக இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க் தடவுவதன் மூலம் பொடுகு தொல்லையை நீக்கலாம். எனவே, இவற்றை தலையில் தடவி மசாஜ் செய்து வருவதன் மூலம் விரைவில் நிவாரணம் பெற முடியும்.

சேதமடைந்த முடியை அகற்ற

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க், சேதமடைந்த மற்றும் பிளவுபட்ட முனைகளிலிருந்து விடுபட வைக்கிறது. இந்த ஹேர் மாஸ்க் பயன்பாடு முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சூரியக் கதிர்களில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க உதவுகிறது. இது மாசுபாட்டிலிருந்தும் முடியை பாதுகாக்கிறது.

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க் செய்வது எப்படி (How To Make Egg And Olive Oil Hair Mask)

இந்த ஹேர்மாஸ்க் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.

  • முதலில் ஒரு முட்டையை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
  • இதை நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது ஹேர் மாஸ் தயாராகி விட்டது.
  • இதை பயன்படுத்துவது மிக எளிதாகும். இதை முடியில் தடவி 30 நிமிடம் வைத்து பிறகு, நல்ல, இயற்கையான ஷாம்பூ கொண்டு கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water Hair Mask: நீளமான, கருகரு கூந்தலுக்கு தேங்காய் தண்ணீர் ஹேர் மாஸ்க்கை இப்படி பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Coconut Water Hair Mask: நீளமான, கருகரு கூந்தலுக்கு தேங்காய் தண்ணீர் ஹேர் மாஸ்க்கை இப்படி பயன்படுத்துங்க.

Disclaimer

குறிச்சொற்கள்