முடி தாறுமாறா கொட்டுதா? முருங்கை இலையை இப்படி பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
முடி தாறுமாறா கொட்டுதா? முருங்கை இலையை இப்படி பயன்படுத்துங்க.

முடி தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க முருங்கை இலைகள் பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து, கரோட்டின், பயோட்டின், ஜிங்க், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இவை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் முருங்கை இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை முடி உதிர்வதைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன. முடி உதிர்வைத் தடுக்க முருங்கை இலைகள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

முடி உதிர்வைத் தடுக்க முருங்கை இலையை பயன்படுத்துவது எப்படி?

தலை முடி உதிர்வைத் தடுக்க, முருங்கை இலைகள் எந்தெந்த வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காண்போம்.

முருங்கை இலை மற்றும் ஆம்லா ஹேர் மாஸ்க்

முருங்கை இலை, ஆம்லா இரண்டும் தனித்தனியே முறையே முடி பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது. முருங்கை இலை மற்றும் ஆம்லா ஹேர் மாஸ்க் முடி உதிர்வைத் தடுத்து, முடி பாதுகாப்பை உறுதி செய்கிறது. முதலில் முருங்கை இலையைக் காயவைத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth: நீளமான மற்றும் கருமையான கூந்தலுக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது?

தயாரிக்கும் முறை

  • பாத்திரம் ஒன்றில் 2 ஸ்பூன் முருங்கை இலையைப் பொடி செய்து அதில் ஒரு ஸ்பூன் ஆம்லா பொடி சேர்க்கவும்.
  • மேலும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும்.
  • இவை அனைத்தையும் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும்.
  • பிறகு அரை மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவ வேண்டும்.
  • இது முடி உதிர்வைப் பெருமளவு குறைத்து விடும்.
  • சிறந்த முடிவு பெற வாரத்திற்கு 1 முதல் 2 முறை பயன்படுத்த வேண்டும்.
  • இது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றை நீக்குகிறது.
  • இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

முருங்கை இலை எண்ணெய் தடவுவது

முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட முருங்கை இலை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை

இதை தயாரிக்க முருங்கை இலை பொடியை எடுத்துக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெயைக் கலக்கவும். பின் இந்த கலவையை எண்ணெயின் நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் விட்டு, காலையில் லேஷான ஷாம்பு கொன்டு கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தி வர, முடி உதிர்வு பிரச்சனை குறைவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Rosemary For Hair Growth: வேகமாக முடி வளர ரோஸ்மேரியை இப்படி பயன்படுத்துங்க

முருங்கை இலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

முடி உதிர்வைத் தடுப்பதற்கு முருங்கை இலை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் ஈரப்பதத்தை வழங்குகிறது. மேலும் முருங்கை இலைகளில் பயோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தி கொலாஜனை உற்பத்தி செய்கிறது.

தயாரிக்கும் முறை

  • முருங்கை இலையை அரைத்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
  • இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 1 முதல் 2 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

முடி உதிர்வதைத் தடுக்க முருங்கை இலைகளை இந்த வழிகளில் பயன்படுத்தலாம். எனினும், முடி சார்ந்த பிரச்சனைகளுக்குப் புதிய முறையைக் கையாளும் முன், நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Rice Water For Hair: முடி நீளமாகவும், கருமையாகவும் வளர அரிசி நீரை இப்படி பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Creatine Side Effects: கிரியேட்டின் முடி உதிர்வை ஏற்படுத்துமா?

Disclaimer