Rice Water For Hair: முடி நீளமாகவும், கருமையாகவும் வளர அரிசி நீரை இப்படி பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Rice Water For Hair: முடி நீளமாகவும், கருமையாகவும் வளர அரிசி நீரை இப்படி பயன்படுத்துங்க.

தலைமுடிக்கு அரிசி நீர்

அரிசி ஊறவைத்த பிறகு அல்லது சமைத்த பிறகு எஞ்சியிருக்கும் மாவுச்சத்து நீரை தலைமுடிக்குத் தேய்ப்பதன் மூலம் முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. அரிசி இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. அரிசியில் கிட்டத்தட்ட 75 முதல் 85% வரையிலான மாவுச்சத்து நிறைந்துள்ளது. இந்த அரிசி நீரில் பல்வேறு வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவற்றில் குறிப்பாக வைட்டமின் ஈ, பி, அமினோ அமிலங்கள், தூண்டேற்றிகள், கனிமங்கள் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!

தலைமுடிக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிகள்

அரிசி நீரைத் தலைமுடிக்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்போது அரிசி நீரை தலைமுடிக்கு பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

ஊற வைத்த அரிசி நீர்

பச்சரிசி, புழுங்கலரிசி, சிவப்பரிசி என எந்தவகை அரிசியாக இருப்பினும், ஏதாவது ஒரு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.

கால் கப் அளவிலான அரிசியை தண்ணீர் சேர்த்து நன்கு அழுக்கு இல்லாமல் கழுவிக் கொள்ள வேண்டும். பின், இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஊறவைக்க வேண்டும். இவ்வாறு அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நன்கு ஊறவைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நீரை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

சாதாரண நீர் அல்லது புளித்த நீர்

சாதாரண அரிசி நீரை விட, புளிக்க வைக்கப்பட்ட அரிசி நீர் தலைமுடிக்கு சிறந்ததாக அமைகிறது. புளிக்க வைக்கப்பட்ட அரிசி தண்ணீர் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமம், தலைமுடி போன்றவற்றில் ஏற்படும் சேதத்தை சரிசெய்கிறது.

புளிக்க வைத்த அரிசி நீரைத் தலைக்கு தேய்க்க விரும்பினால், அரிசியை ஊறவைத்து வடிகட்டி பின் நீரை 2 நாள்கள் வைத்து புளிக்க வைக்க வேண்டும். இந்த புளித்த நீரைத் தலைக்குத் தேய்த்து குளிப்பதன் மூலம் தலையில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!

வேகவைத்த அரிசி கஞ்சி

அரிசி நீரை பயன்படுத்தும் வழிகளில் அரிசியை வேக வைத்து அந்த தண்ணீர் கெட்டியாக மாற ஆரம்பிக்கும். இப்போது அரிசி சாதத்திலிருந்து கஞ்சியைத் தனியாக வடிகட்டி எடுத்துக் கொண்டு அதைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

தலைமுடிக்கு அரிசி நீரை பயன்படுத்துவது எப்படி?

தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக அரிசி நீர் பயன்படுத்தப்படுகிறது. அரிசி நீரைப் பயன்படுத்தும் போது தலையில் எண்ணெய் பிசுக்குகள் இருக்கக் கூடாது. முதலில் எப்போதும் போல ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசி விட்டு, பின்னர் அரிசி நீரைத் தலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உச்சந்தலை முதல் நுனி வரை மசாஜ் செய்யலாம்.

இவ்வாறு 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பிறகு வெறும் தண்ணீரால் தலையை அலசி விடலாம். இப்போது தலைமுடி மென்மையாக இருப்பதை உணரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!

Image Source: Freepik

Read Next

Aloe Vera Benefits: முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Disclaimer