$
Aloe Vera Benefits For Hair: கற்றாழை எளிமையாக கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்தது செடியாகும். சித்த மருத்துவ துறையில் பல சிகிச்சைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. அதே போல் அழகு நிலையங்களில் கூட இவை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட கற்றாழை, முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வைக்கிறது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, பொடுகு, இளநரை போன்ற பிரச்சனைகளிலிருந்து முடியை காத்து, முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் ஊக்குவிக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல் கூந்தலுக்கு இயற்கையான முறையில் தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, உச்சந்தலையில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வழுக்கை பிரச்சனைக்கு இது சிறந்த தேர்வாக திகழ்கிறது. இத்தகைய கற்றாழையை எப்படியெல்லாம் உங்கள் வழக்கத்தில் இணைப்பது என்பது குறித்து இங்கே காண்போம்.

கற்றாழை எண்ணெய்
கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து, தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும், தனியாக பிரித்தெடுத்த கற்றாழை ஜெல்லை அதில் சேர்க்கவும். பின் 15 நிமிடங்கள் கழித்து, இதனை வடிகட்டி ஆற விடவும். பின் இதனை ஒரு பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும்.
இதையும் படிங்க: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!
கற்றாழை மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
முட்டையில் மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுக்கவும். இதில் சிறிதளவு ஆலிவ் ஆயில் மற்றும் கற்றாழை ஜெல்லை இணைக்கவும். இதனை ஒன்று சேர கலந்து பேஸ்ட் போல் உருவாக்கவும். பின் இந்த பேஸ்ட்டை, உச்சந்தலையில் மாஸ்க் போல் தடவவும். இது முடிந்த பின் ஷவர் கேப் கொண்டு முடியை மூடவும். இதனை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மென்மையான ஷாம்பு கொண்டு, முடியை அலசவும்.

கற்றாழை மற்றும் வெங்காய சாறு
வெங்காய சாற்றை கற்றாழையுடன் கலக்கும்போது, முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. வெங்காயத்தை நன்கு அரைத்து, அதனை சக்கை தனியாகவும், சாறு தனியாகவும் பிரித்து எடுக்க வேண்டும். பின் வெங்காய சாற்றில், கற்றாழை சாற்றை கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இதனை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் லேசான ஷாம்பு மூலம் முடியை அலசவும்.
கற்றாழை ஜெல் பொதுவாக எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை பயன்படுத்துவது பாதுகாப்பானது. இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் அரிப்பு ஏற்பட்டால், தோல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Image Source: Freepik