Natural Hair Oil: சாதாரண நாட்களை விட மழைக்காலத்தில் முடி உதிர்தல் சுமார் 30 சதவீதம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் முடி அதிகப்படியான ஹைட்ரஜனை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது, இது முடியின் இயற்கையான எண்ணெய்களை அகற்றும். இதனால் முடி வறண்டு, வேர்களில் இருந்து பலவீனமாகிறது. இதன் விளைவாக, முடி உதிர்கிறது.
எனவே மழைக்காலத்தில் தலைமுடிக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. முடிக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காண சந்தையில் பல எண்ணெய்கள் இருந்தாலும், வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கை எண்ணெயால் மட்டுமே சரியாகவும் தேவையறிந்தும் தலைமுடியை பராமரிக்க முடியும்.
இதையும் படிங்க: இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
வீட்டிலேயே இயற்கை முறை முடி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
கீழே இரண்டு ரெசிபிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணெய்களை பயன்படுத்தினால் சுமார் ஒரு வாரத்தில் முடி உதிர்வது நின்றுவிட வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஆயுர்வேத முறையை தொடர்ந்து பயன்படுத்தினால் ஆரோக்கியமான, வலிமையான மற்றும் கருமையான கூந்தலைப் பெறலாம்.
தேங்காய், செம்பருத்தி முடி எண்ணெய்
● 1 கப் தேங்காய் எண்ணெய்
● 1 கைப்பிடி கறிவேப்பிலை
● 2 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள்
● 2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
● 2 செம்பருத்தி மலர்கள்
இதை செய்வது எப்படி?
ஒரு கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயை கலக்கவும். இந்த பாட்டிலை மூடி, தினமும் குறைந்தது 3 மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும். ஒன்று முதல் இரண்டு வாரங்கள் கழித்து, அதன் நிறம் கருமையாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். பின்னர் இந்த எண்ணெயை வடிகட்டவும். அவ்வளவுதான் உங்கள் நேச்சுரல் ஹேர் ஆயில் தயார். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது சூடாக்கி, சூடான எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் பலனை உணராலம்.
வேப்ப எண்ணெய்:
● 1 கப் தேங்காய் எண்ணெய்
● 2 கப் எள் எண்ணெய்
● 1/2 கப் ஆமணக்கு எண்ணெய்
● 4 தேக்கரண்டி பிராமி தூள்
● 3 தேக்கரண்டி பிரிங்ராஜ்
● 1 தேக்கரண்டி நசுக்கிய வேப்ப இலை
● 1 தேக்கரண்டி கறிவேப்பிலை
● 1 தேக்கரண்டி வெந்தய தூள்
● 2 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள்
● 4 செம்பருத்தி மலர்கள்
செய்முறை விளக்கம்:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து எண்ணெயையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும். பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து இந்த கலவையை 15 நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு ஆறவைத்து எண்ணெயை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த எண்ணெயை தேவைக்கேற்ப எடுத்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து குறைந்தது 30 நிமிடம் விட்டு பின் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இதுவும் ஏறத்தாழ உடனடி பலனை கொடுக்கும். தலைமுடியும் வலுவாகும்.
இதையும் படிங்க: அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!
இதுபோன்ற ஆயுர்வேத முறை நமக்கு கைக்கொடுக்கும் என்றாலும் தலைமுடி உதிரும் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik