Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.


Ways To Use Hibiscus Flowers For Hair: இன்று பலரும் இயற்கையான அழகைப் பெற விரும்பி சருமம் மற்றும் முடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் ஏற்படும் நரை முடி பிரச்சனை முன்கூட்டியே வயதானவராக தோற்றமளிக்கும். இந்த சூழலில் முடியை கருமையாக்கவும், பளபளப்பை அதிகரிக்கவும் இயற்கையான முறையில் செம்பருத்தி பூக்களைப் பயன்படுத்தலாம். செம்பருத்திப் பூக்களில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது தலைமுடியை இயற்கையாகவே கருமையாக மாற்ற உதவுகிறது. மேலும் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது. இதில் தலைமுடி கருமையாக வளர செம்பருத்தி பூக்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்துக் காண்போம்.

செம்பருத்தி பூவை தலைமுடிக்கு பயன்படுத்துவது எப்படி

தலைமுடிக்கு செம்பருத்தி பூக்களுடன் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாகவும் வைக்க உதவும் மற்ற பொருள்களைக் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water Hair Mask: நீளமான, கருகரு கூந்தலுக்கு தேங்காய் தண்ணீர் ஹேர் மாஸ்க்கை இப்படி பயன்படுத்துங்க.

செம்பருத்தி பூக்கள் மற்றும் தயிர்

தலைமுடியைக் கருப்பாக வைத்திருக்க, செம்பருத்தி பூக்களுடன் தயிர் கலந்து பயன்படுத்தலாம்.

  • முதலில் கிண்ணம் ஒன்றில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை அரைத்து வைத்து, அதை தயிருடன் சேர்க்கவும்.
  • இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம்.
  • ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவி விடலாம். இதை வாரத்திற்கு இருமுறை செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

கற்றாழை மற்றும் செம்பருத்தி பூக்கள்

முன்கூட்டியே நரைத்த தலைமுடிக்கு, செம்பருத்தி பூக்களுடன் கற்றாழையைக் கலந்து பயன்படுத்தலாம்.

  • இதற்கு முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதில் கற்றாழை ஜெல்லைக் கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி வர முடி பிளவு, உதிதல் மற்றும் வெள்ளை முடி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது.
  • வாரத்திற்கு இரு முறை இந்த கலவையைப் பயன்படுத்தி வர, நல்ல பலன்களைப் பெறலாம்.

தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி பூக்கள்

முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறிய தலைமுடியில் செம்பருத்தி பூக்களுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து பயன்படுத்தலாம்.

  • இதற்கு தேங்காய் எண்ணெயை ஒரு கடாய் ஒன்றில் எடுத்துக் கொள்ளவும்.
  • இதில் 8 முதல் 10 செம்பருத்தி பூக்கள் மற்றும் 5 முதல் 6 செம்பருத்தி இலைகளைச் சேர்க்க வேண்டும்.
  • இதைச் சிறிது நேரம் சூடாக்கவும்.
  • பின் அடுப்பை அணைத்து, சிறிது குளிர்வித்து எண்ணெய் ஆறிய பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
  • இந்த எண்ணெயைத் தலைமுடிக்கு மசாஜ் செய்து வர கருப்பு நிற கூந்தலைப் பெறலாம்
  • சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு 1 முதல் 2 முறை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Hair Care: குளிர்காலத்தில் முடி ரொம்ப வறண்டு போகுதா? இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க.

செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை

வெள்ளை முடியைக் கருப்பு நிறமாக மாற்ற செம்பருத்தி பூக்களுடன், கறிவேப்பிலையைக் கலந்து பயன்படுத்தலாம்.

  • இந்த முறையில், செம்பருத்திப் பூக்கள் மற்றும் கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இவை இரண்டையும் நன்றாக அரைத்து, பின் தலைமுடியில் தடவலாம்.
  • இந்த கலவையை கூந்தலில் தடவ, முடி இயற்கையாகவே கருமை நிறமாக மாறும்.
  • விரும்பினால், இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

செம்பருத்தி பூக்கள் மற்றும் ஆம்லா

தலைமுடியைக் கருப்பாக மாற்ற, செம்பருத்தி பூக்களுடன் நெல்லிக்காய் பொடி கலந்து பயன்படுத்தலாம்.

  • முதலில் செம்பருத்திப் பூக்களை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதில் நெல்லிக்காய் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் கலக்கவும்.
  • இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம்.
  • அரை மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவி விடலாம்.

இந்த கலவை முடியை வலுவாக வைக்க உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், நரைமுடியைத் தடுக்கிறது.

செம்பருத்தி பூக்களை இந்த வழிகளில் பயன்படுத்துவதன் மூலம், முடி கருமையாக மற்றும் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.

Image Source: Freepik

Read Next

Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.

Disclaimer