Tips To Take Care Of Dry Hair In Winter: குளிர்காலத்தில் உடல் நலப் பிரச்சனைகளுடன் சேர்த்து முடி மற்றும் சருமப் பிரச்சனைகளையும் பெரும்பாலானோர் சந்திப்பர். இந்த காலகட்டத்தில் முடி வறண்டு உயிரற்றதாக மாறி விடுகிறது. சிலர் குளிர்காலத்தில் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்துவர். இது உச்சந்தலை மற்றும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றலாம். மேலும், சூடான நீரில் ஷாம்பூவை உபயோகிப்பது முடியின் தன்மையை நீக்குகிறது. இதனால் குளிர்காலத்தில் வறண்ட,உயிரற்ற முடியானது பொடுகு போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.
சாதாரண கூந்தல் கொண்டவர்களுக்கு முடிவறட்சி அதிகம் இருப்பதில்லை. ஆனால், முன்னதாகவே முடி வறண்டு உயிரற்ற நிலையில் இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இதனால், அவர்களுக்கு கடுமையான முடி உதிர்வை ஏற்படலாம். குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு உதிர்ந்து போகலாம், ஏனெனில், சருமத்தில் ஈரப்பதம் இருப்பது போல கூந்தலில் இல்லை. இந்த குளிர்காலத்தில் வறண்ட மற்றும் உயிரற்ற சருமத்தைப் பராமரிப்பதற்கான குறிப்புகள் குறித்து போர்டு சான்றளிக்கப்பட்ட தோல் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷரத் இன்ஸ்டாகிராம் இடுகையில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Cracked Heels Remedies: குதிகால் வெடிப்பைக் குணப்படுத்த சிறந்த வீட்டு வைத்திய முறைகள்
குளிர்காலத்தில் வறண்ட கூந்தலைப் பராமரிப்பதற்கான குறிப்புகள் என்ன?
குளிர்காலத்தில் வறண்ட மற்றும் உயிரற்ற கூந்தலைப் பராமரிக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்.
அதிக சூடான நீர் உபயோகிப்பதைத் தவிர்த்தல்
எப்போதும் வெதுவெதுப்பான நீரில் முடியைக் கழுவுவது நல்லது. சூடான நீரில் முடியைக் கழுவுவதால் அதில் உள்ள இயற்கை எண்ணெய்களும் வெளியேற்றப்பட்டு முடியை வறண்டு போக வைக்கிறது.
கண்டிஷனர் தடவுதல்
முடியைக் கழுவிய பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். உச்சந்தலையில் இருந்து ஒரு அங்குல இடைவெளியில் முடி முழுவதும் கண்டிஷரைப் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
நட்ஸ் மற்றும் விதைகளை உண்ணுதல்
வால்நட், பாதாம், சூரியகாந்தி மற்றும் ஆளி விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எடுத்துக் கொள்வதை அதிகரிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
முடிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்தல்
தொடர்ந்து முடிக்கு அழுத்தம் கொடுப்பது முடிக்கு பிரச்சனையைத் தரும். இயந்திரங்களின் உதவியுடன், முடியை நேராக்குவது அல்லது ரீபான்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வெப்ப சிகிச்சைகளை மேற்கொள்ளும் முன், நல்ல வெப்ப பாதுகாப்பு சீரத்தைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய் தடவுதல்
தலைமுடிக்கு எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனராகும். எனவே, முடியின் முழு நீளத்திலும் எண்ணெய் தடவி, சுமார் 4 மணி நேரம் விட்டு, பிறகு ஷாம்பூ பயன்படுத்தலாம்.
சரியான முடி சீரம் தேர்வு செய்வது
ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சீரம் மற்றும் ஹேர் கிரீம்கள் உள்ளது. இது வறண்ட மற்றும் உதிர்ந்த முடிக்கு சிறந்த தேர்வாகும். இந்த சீரத்தை ஷாம்புவிற்குப் பிறகு அல்லது படுக்கை நேரத்தில் பயன்படுத்தலாம்.
ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
முடியை அடிக்கடி உலர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். உலர்த்த வேண்டும் எனில், குறைந்த வெப்ப அமைப்பில் வைத்து உலர வைக்கலாம். முடிந்தவரை ஹேர் ட்ரையர் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
Image Source: Freepik