How to Get Rid of Cracked Heels: குளிர்காலம் வந்துவிட்டாலே குதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சாதாரண நேரங்களிலும் கால்களைப் பராமரிப்பதை புறக்கணித்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். குதிகால் வெடிப்பு ஏற்பட்டிருப்பின், குதிகால் வெளிப்புறத்தில் விளிம்பு மற்றும் அடிப்பகுதி கடினமாக இருக்கும். மேலும், கால்களின் தோல் வறண்ட செதில்களாக மாறும். இந்த பிளவுகள் ஆழமாக இருந்தால் கடுமையான வலி ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
முக்கிய கட்டுரைகள்
குதிகால் வெடிப்பு குணமாக சில வீட்டு வைத்திய முறைகள்
குதிகால்களில் வெடிப்பால் ஏற்படும் கடுமையான வலியில் இருந்து விடுபட, ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும். இப்போது குதிகால் வெடிப்பு குணமாக உதவும் சில வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.
கால்களைக் கழுவுதல்
கால்கள் வறண்டு போகாமல் தடுக்க கால்களைக் கழுவுவதை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக மிகவும் சூடான அல்லது மிகவும் குளிரான தண்ணீர் இல்லாமல் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு கால்கள் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சாக்ஸ் அணிந்து கொள்ளுதல்
கால்களில் ஈரப்பதத்தை அடைக்கும் வழிகளில் ஒன்று சாக்ஸ் அணிந்து கொள்வது. கால்களை கழுவிய பிறகு சாக்ஸ் அணிந்து படுக்கைக்குச் செல்வது ஈரப்பதத்தைத் தருவதற்கான வழியாக அமைகிறது. இது குதிகால் வெடிப்புக்கு சிறந்த வழியாகும்.
தேன்
தேன் எளிதாக கிடைக்கக் கூடிய மூலப்பொருளாகும். இது குதிக்காலில் ஏற்படும் வெட்டுகள் மற்றும் காயங்களுக்குத் தீர்வாக அமைகிறது. இவை தோல் நிலைகளை நிர்வகிக்க உதவுகிறது. குதிகால் வெடிப்பை நெக்க தேனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் அரிசி மாவு கலந்து பேஸ்ட் போல செய்து குதிகால்களில் தடவவும். பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவ குதிகால்கள் மென்மையாக மாறும்.
இந்த பதிவும் உதவலாம்: Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்
ஈரப்பதம்
சருமத்தை வறண்ட நிலையில் இருந்து பாதுகாப்பதில் ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சருமத்தை கழுவி உலர்த்திய பின் ஈரப்படுத்த வேண்டும். இவ்வாறு சருமம் ஈரப்பதம் அடைந்த பின், லோஷன்கள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய்
குதி கால்களில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை சரி செய்ய ஆலிவ் எண்ணெய் உதவியாக இருக்கும். இது திசு சரிசெய்தலை உறுதிப்படுத்துவதுடன், இறந்த செல்களை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் இவற்றை நேரடியாக பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். மேலும், குதிகால் வெடிப்பு குணமாக தேன் மற்றும் எள் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பயன்படுத்தலாம். இது குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்த உதவும் சிறந்த இயற்கை முறையாகும்.
ஷியா வெண்ணெய்
குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்துவதில் ஷியா எண்ணெயும் ஒன்று. இது சருமத்தை மென்மையாக்க உதவும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் பயன்படுத்தப்படுகிறது. ஷியா மரத்தின் கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வெண்ணெய் டெர்மடிடிஸ் என்ற தோல் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. குதிகால் வெடிப்புக்கான வீட்டு வைத்தியங்களில் ஷியா வெண்ணெய் உதவுகிறது.
இந்த வகை இயற்கை முறையிலான வீட்டு வைத்தியங்களை வைத்து குதிகால்களின் வெடிப்பை சரி செய்ய முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Oil Skin Tips : உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா? உங்களுக்கான மாய்ஸ்சரைசரை எவ்வாறு தேர்வு செய்வது?
Image Source: Freepik