$
Tips to get rid of Dark Circles: முகத்தின் அழகைக் கெடுக்கும் கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு வயதானோர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்திக்கின்றனர். அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துதல், வேலைப்பளு காரணமாக தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கண்களில் கருவளையங்கள் ஏற்படுகின்றன.
கருவளையம் ஏற்படக் காரணம்
முகத்தில் கண்களுக்கு கீழாக இருக்கும் பகுதி மிகுந்த மென்மையான சதைப் பகுதி ஆகும். இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், அதிக மன அழுத்தம், இருட்டில் மொபைல் பயன்படுத்துவது, டிவி பார்ப்பது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் கண்களுக்குக் கீழ் கருவளையத்தை அதிகப்படுத்துகிறது. இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் விடும் போது, அதிகப்படியான கருமை ஏற்படும். இது நிரந்தரமாக இருக்கவும் வாய்ப்புண்டு. எனவே, கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை மறைக்க சில இயற்கையான வீட்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
கண் கருவளையங்கள் நீங்க இயற்கையான வீட்டு முறைகள்
கண்களுக்குக் கீழ் உள்ள சதைப்பகுதியில் ஏற்படும் கருவளையங்களை நீக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய இயற்கையான வீட்டு முறைகள் சிலவற்றைக் காண்போம்.
உருளைக்கிழங்கு
உணவுப் பொருளான உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி, முகத்தில் உள்ள கருவளையத்தை எளிமையாக நீக்கலாம். உருளைக்கிழங்கை அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் சாற்றை காட்டன் துணியில் நனைத்து அதனை கண்ணைச் சுற்றித் தடவ வேண்டும். இதனை 10 நிமிடம் வரை ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை எளிதில் நீக்கலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை உள்ளன. இவை சரும பராமரிப்பிலும், முடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயுடன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் தடவலாம். 10 நிமிடம் கழித்து இவற்றைத் தண்ணீரைக் கொண்டு கழுவ கருவளையம் நீங்கி விடும்.

இந்த பதிவும் உதவலாம்: ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
ரோஸ்வாட்டர்
சரும பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் ரோஸ்வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம். காட்டன் துணியைப் பயன்படுத்தி, ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 15 – 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனைத் தினமும் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் எளிதாக நீங்கி விடும்.
உருளை மற்றும் வெள்ளரி சாறு
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனித்தனியே சிறிதளவு துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
கற்றாழை ஜெல்
சரும பராமரிப்பில் மிக முக்கியமான பங்கு வகிப்பது கற்றாழை ஜெல் ஆகும். சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படும் கற்றாழை ஜெல் சருமத்திற்கு நீண்ட கால ஆரோக்கியத்தைத் தருகிறது. கற்றாழை ஜெல்லை, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவற்றை இரவு முழுவதும் வைத்திருப்பது சிறந்தது. கண்கள் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல ஓய்வு கிடைக்கும். இவ்வாறு செய்து வர, கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதாக நீக்கி விடலாம்.
குளிர்ந்த பால்
பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்குகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மாய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு பாலை காட்டன் பஞ்சு ஒன்றில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். மேலும், 15 நிமிடங்கள் கழித்து இவற்றைக் குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
Image Source: Freepik