Doctor Verified

Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்

  • SHARE
  • FOLLOW
Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்

முகப்பருவுடன் போராடுவது என்பது சற்று கடினமான ஒன்றாக அமைகிறது. முகப்பரு வடுக்கள், முகப்பருவால் ஏற்படக்கூடிய அழற்சியின் விளைவாக அமைகிறது. சருமத்தில் உற்பத்தியாகக்கூடிய கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபைபர்களை சேதப்படுத்துவதாக அமைகிறது. முகப்பருக்கள் நீங்கிய பிறகு தழும்புகள் ஏற்பட்டு நீண்ட நேரம் இருக்கும். இந்த முகப்பரு தழும்புகளை நீக்க மருத்துவ சிகிச்சைகள் இருப்பினும் சில இயற்கையான முறைகளும் பங்கு வகிக்கிறது. முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கான சில இயற்கையான வழிமுறைகளை பீகார், தர்பங்கா, டாக்டர் கணேஷ் சௌத்ரி பிஏஎம்எஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

முகப்பருக்களை நீக்க சில இயற்கையான வழிகள்

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சையில் இயற்கையாகவே, ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது. மேலும், இவற்றில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. எனவே இவை சரும பராமரிப்பிற்கு உதவுகின்றன. இருப்பினும், எலுமிச்சைச் சாறில் உள்ள அமிலத்தன்மை எரிச்சலூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதை சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன் சருமத்தை நீரேற்றம் அடையச் செய்ய வேண்டும்.

இது குறித்து டாக்டர் சௌத்ரி அவர்கள், “எலுமிச்சைச் சாற்றை முகப்பரு வடுக்கள் மீது தடவி, அதனை 10-15 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கழு விட படிப்படியாக வடுக்கள் குறையும்” என்று கூறினார்.

அலோவேரா ஜெல்

உடலுக்குப் பல்வேறு வகைகளில் நன்மை தரும் அலோவேரா ஜெல் மென்மையான சருமத்தை அளிக்கிறது. கற்றாழையில் இருந்து பெறப்படும் தாதுக்கள், வைட்டமின்கள், என்சைம்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவை சருமப் பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

கற்றாழை ஜெல்லை முகப்பரு தழும்பு இருக்கும் இடத்தில் நேரடியாக அப்ளை செய்வதன் மூலம் குறைக்க முடியும். மேலும், சருமத்திற்கு தொடர்ந்து ஜெல்லை அப்ளை செய்து வந்தால் விரைவாக முகப்பருக்களை குணப்படுத்த முடியும்.

தேங்காய் எண்ணெய்

சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி, சருமம் வறட்சியடைவதைத் தடுக்கிறது. இவற்றை வடுக்கள் மீது தடவி வர, காலப்போக்கில் மறைந்து சருமம் மென்மையாகக் காணப்படும். மேலும் முழுவதும் உறிஞ்சப்படும் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து வர வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

தேன்

தேன் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளை கொண்டதாகும். இது வீக்கத்தைக் குறைத்து, சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும், முகப்பரு தழும்புகளுக்கு தேனை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த திசுக்கள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், இவை சருமத்தை ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவுகிறது. தழும்புகளில் தேனை 20 முதல் 30 நிமிடம் வரை வைக்க வேண்டும். இது வடுவை மறைய வைக்கும்.

பேக்கிங் சோடா

இது ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட் ஆகும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இவற்றிற்கு, பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்து முகப்பரு வடுக்கள் உள்ள இடத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்து வந்தால் தோற்றத்தைக் குறைக்க உதவும். அதே சமயம், பேக்கிங் சோடாவை அதிகமாகப் பயன்படுத்தினால் சரும வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, பேக்கிங் சோடாவை மிதமாகப் பயன்படுத்தலாம்.

ரோஸ்ஷிப் விதை ஆயில்

இந்த வகை எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை தோலை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. எனவே, முகப்பரு வடுக்கள் மீது இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது அவை சருமத்தை மேம்படுத்த உதவும். மேலும், இவை தோல் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தழும்புகள் நீங்க ரோஸ்ஷிப் விதை எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை தழும்புகள் உள்ள பகுதியில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Aloe Vera Benefits : கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

முகப்பரு வடுக்களை நீக்குவதற்கு கடினமாக இருந்தாலும், இது போல சில இயற்கை வழிகள் சருமத்தில் உள்ள வடுக்களை நீக்குவதுடன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இருப்பினும், தனிப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு தோல் மருத்துவரை அணுகி பயன்பெறலாம்.

Image Source: Freepik

Read Next

Skin Glowing Tips: எந்தெந்த பூக்களை பயன்படுத்தினால் முகம் டபுள் பொலிவு பெறும்!

Disclaimer

குறிச்சொற்கள்