Flowers for Glowing Skin: அழகை பராமரிக்க விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு திட்டமிடும் பலரும் அதை செய்வதில்லை, காரணம் அதற்கான நேரம் கிடைப்பதில்லை. காலையில் எழுந்ததும் இரவில் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும் என்றும் இரவில் தூங்கும் போது காலை எழுந்ததும் இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும் என பலர் நினைப்பார்கள் ஆனால் அந்தெந்த நேரத்தில் அதை செய்ய மாட்டார்கள். உடல் உள்உறுப்புகளை பராமரிக்க ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி சாப்பிடும் நாம், முகம், முடி போன்றவைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது வயது உட்பட அனைத்தையும் வெளிப்படுத்துவது முகமும் முடியும் தான். அதை கவனமாக பராமரிப்பது மிக முக்கியம்.
முகத்தை பராமரிக்க பூக்களை எப்படி பயன்படுத்துவது?

முகத்தை பராமரிக்க பல்வேறு க்ரீம்களை ஆன்லைனிலும், கடையிலும் வாங்கி அப்ளை செய்து அதற்கான பலன் கிடைக்காமல் அவதிப்படுகிறீர்களா?. இனி கவலை வேண்டாம். இயற்கையான பூக்களை முகத்திற்கு சரியாக பயன்படுத்தினால் முகம் டபுள் பொலிவு பெறும். பூக்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஸ் பேக் செய்து அப்ளை செய்வதன் மூலம் சருமம் பிரச்சனை குறைந்து முகம் பொலிவு பெறும். அழகு அதிகரிக்க விலையுயர்ந்த க்ரீம்களை விட எளிதில் கிடைக்கும் இயற்கையான பூக்களை முகத்திற்கு பயன்படுத்தினால் அழகு இரட்டிப்பாகும்.
ரோஜா பூ
பெரும்பாலானோர் தோட்டத்திலும் கடையில் எளிதிலும் கிடைக்கக் கூடிய பூக்கள் ரோஜா. இந்த ரோஜா பூ அழகை பராமரிக்க பெருமளவு உதவும். கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்க ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. பருத்தியை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களை சுற்றி தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ரோஜாவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது தோலில் உள்ள அரிப்பு, வீக்கம் போன்றவற்றையும் நீக்குகிறது. ரோஜா ஒரு நல்ல சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது. ரோஸ் வாட்டர் நம் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
லாவெண்டர் பூ
லாவெண்டர் பூக்கள் தோல் எண்ணெய் மற்றும் pH அளவை சமன் செய்கிறது. இது சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். லாவெண்டர் பேஸ் மாஸ்க்.. தொற்றுகளை குணப்படுத்துகிறது. இந்த பூவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. லாவெண்டர் எண்ணெய் சருமத்தை பளபளப்பாக்குகிறது. லாவெண்டர் எண்ணெயை முகத்தில் தடவுவது நல்லது. இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குகிறது. முகப்பரு வராமல் தடுக்கிறது.
சாமந்தி
சாமந்தியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. தோல் எரிச்சலில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பூக்களை உலர்த்தி பொடி செய்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
செம்பருத்தி
இந்த பூவில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இரண்டு ஸ்பூன் செம்பருத்தி இதழ்கள், ஒரு ஸ்பூன் கற்றாழை கூழ், அரை ஸ்பூன் முல்தானி மண் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளில் பேக் போடவும். அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். இந்தப் பூக்கள் சருமத்தை முதுமையில் இருந்து பாதுகாத்து, என்றும் இளமையாக காட்சியளிக்க உதவுகிறது.
மல்லிகைப் பூ
மணம் வீசும் மல்லிகைப் பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மல்லிகைப் பூக்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அவை பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. முகத்தை ஈரப்பதமாக்கி, பொலிவாக்கும் குணம் மல்லிகைக்கு உண்டு. கொத்து மல்லிகையை பேஸ்ட் செய்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
லில்லி பூக்கள்
லில்லி பூக்கள் சருமத்திற்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்கின்றன. இரண்டு ஸ்பூன் லில்லி பூ இதழ்களை ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால்… சுருக்கங்கள், புள்ளிகள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
இந்த பூக்கள் முகத்தை பொலிவாக வைக்க பெருமளவு உதவும் என்றாலும் ஏதேனும் பின் விளைவை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik