Tips to remove small pimples from face: முகத்தில் பருக்கள் எதுவும் இல்லாமல், மென்மையான, பளபளப்பான சருமத்தையே பலரும் விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை, சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் பருக்கள், சருமம் வறட்சி அடைதல், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற முதுமை அறிகுறிகள் காணப்படலாம். அதிலும், சருமத்தில் பருக்கள் ஏற்படுவது சருமத்தை எதிர்மறையாக பாதிப்பதாக அமைகிறது. இது சில சமயங்களில் வலியுடன் காணப்படலாம். இன்னும் சிலருக்கு, முகத்தில் சிறிய அளவிலான பருக்கள் அதிகளவு இருப்பதை பார்த்திருப்போம்.
இந்த வகையான பருக்கள் அழகைப் பாதிக்கக் கூடியதாக அமைகின்றன. இந்த தடிப்புகள் வியர்வை, பூஞ்சை, பாக்டீரியா மற்றும் தொற்று போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம். இந்த பிரச்சனைகளைக் குறைப்பதற்கு சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் இரசாயன விளைவுகளின் காரணமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு மாற்றாக, சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வது பருக்களிலிருந்து விடுபட வைக்கிறது. இதில் முகத்தில் தோன்றும் சிறிய பருக்களை நீக்குவதற்கான சில வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Period Acne: மாதவிடாய்க்கு முன் முகத்தில் பருக்கள் தோன்றுவது ஏன்? காரணம் இதோ!
முகத்தில் முகத்தில் தோன்றும் சிறிய பருக்களை நீக்க வீட்டு வைத்தியம்
முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கு கற்றாழை, மஞ்சள் போன்ற பல வகையான இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். இதில் பருக்களைப் போக்குவதற்கான சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இவை இயற்கையான தேர்வாக இருப்பதால் இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
கற்றாழை தடவுவது
சருமத்தில் ஏற்படும் பருக்கள் பிரச்சனையைக் குறைப்பதில் கற்றாழை ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில், கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. கற்றாழையில் நிறைந்திருக்கும் இந்த பண்புகள் சருமம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு தினமும் இரவு தூங்குவதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வருவதன் மூலம் சருமத்தில் வித்தியாசத்தைக் காணலாம்.
சருமத்திற்கு தேன் பயன்பாடு
முகத்தில் உள்ள பருக்கள் பிரச்சனையைக் குறைப்பதில் தேன் மிகுந்த நன்மை பயக்கும். தேனில் இயற்கை உப்பு காணப்படுகிறது. மேலும் இது இயற்கையாகவே ஈரப்பதத்தை அளிப்பதாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, சருமத்தில் காணப்படும் இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக்குகிறது. இது சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெயைப் போக்க உதவுகிறது. சருமத்தின் துளைகளைத் திறப்பதற்கு சருமத்தில் தொடர்ந்து தேனைப் பயன்படுத்தலாம். இதைத் தடவி 1 மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவலாம். விரும்பினால், சருமத்திற்கு தேன் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். இது சருமத்தை மேலும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi face pack: பளபளப்பான சருமத்திற்கு துளசியுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
சந்தனத்தை பயன்படுத்துவது
முகப் பருக்களைக் குறைப்பதற்கு சந்தனம் மற்றும் சந்தன எண்ணெய் இரண்டுமே நன்மை பயக்கும். இது சருமத்தின் செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வெள்ளைப் புள்ளிகளிலிருந்தும் நிவாரணம் தருகிறது. இதற்கு முகத்தில் சந்தன பேஸ்ட்டைத் தடவி உலர விட வேண்டும். இது காய்ந்த பிறகு, தண்ணீரில் கழுவி விடலாம். சந்தனத்தை பேஸ்ட் வடிவில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணெய் பசை சருமத்திலிருந்து விடுபட முடியும்.
மாதுளைத் தோல் பயன்பாடு
முகத்தில் காணப்படும் வெள்ளைப் புள்ளிகளைக் குறைப்பதற்கு மாதுளைத் தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் தோல் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு மாதுளைத் தோல்களை ஒரு கடாயில் போட்டு பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். அதன் பிறகு, இதை நன்றாக அரைத்து, பொடியாகத் தயார் செய்யலாம். இப்போது இந்தப் பொடியில் எலுமிச்சை அல்லது ரோஸ் வாட்டர் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விட வேண்டும். இது சருமத்தைப் பிரகாசமாக மாற்றுவதுடன், வெள்ளைப் புள்ளிகளைப் போக்கவும் உதவுகிறது.
முகத்தில் உள்ள பருக்களின் பிரச்சனையைக் குறைக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். எனினும், பிரச்சனை அதிகமாகக் கொண்டே இருந்தால் நிபுணரை அணுக வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Forehead Acne: உங்களுக்கு நெற்றியில் மட்டும் பரு வருதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க!
Image Source: Freepik