Home Remedies To Get Rid Of Body Acne: உடலில் பருக்கள் தோன்றுவது முழு தோற்றத்தையும் கெடுக்கலாம். இந்த பருக்களைப் போக்குவதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகள் முதல் உணவு முறைகளை மாற்றுவது வரை பல வகையான வழிகளை முயற்சி செய்கிறோம். நாம் நிறைய பருக்களைக் கவனிப்பது முகத்தில் மட்டுமே. ஆனால், எப்போதாவது உடலில் தோன்றும் பருக்கள் குறித்து யோசித்திருக்கிறீர்களா? இதை பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள்.
எனவே உடலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மற்ற உடல் பாகங்களுக்கும் அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. உடலில் தோன்றும் பருக்கள் முதுகு, மார்பு மற்றும் பிட்டம் போன்ற பல்வேறு உடல் பாகங்களைப் பாதிக்கலாம். இதற்கு வணிக ரீதியான பாடி வாஷ்கள் மற்றும் சோப்புகள் போன்றவை உடல் பருக்களை குணப்படுத்துவதாக இருப்பினும், இதில் உள்ள அதிக இரசாயன உள்ளடக்கம் தீங்கு விளைவிக்கலாம். உடலில் தோன்றும் பருக்களைக் குறைக்க உதவும் இயற்கையான வழிகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Back Acne Remedies: முதுகு பருக்களால் அவதியா? ஒரே இரவில் பருக்களைக் குறைக்க இதுல ஒன்னு யூஸ் பண்ணுங்க!
உடல் பருக்கள் எவ்வாறு தோன்றுகிறது?
உடலில் ஏற்படும் பருவின் வடிவம் ஒரே வடிவமாக இருக்காது. ஆனால் இது வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், நீர்க்கட்டிகள், பருக்கள் மற்றும் கொப்புளங்களின் வடிவமாக இருக்கலாம். உடலில் பருக்கள் முதுகு, மார்பு மற்றும் பிட்டம் போன்ற பல்வேறு உடல் பாகங்களில் ஏற்படுகிறது. இது இறந்த சரும செல்கள், வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றால் மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்படும் போது ஏற்படும் ஒரு தோல் நிலையே பருக்கள் எனப்படுகிறது. இது பொதுவாக பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கே ஏற்படுகிறது.
இந்த பருக்களானது அதிகப்படியான எண்ணெய்கள் மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவை மயிர்க்கால்களில் சிக்குவதால் உருவாகிறது. இது பொதுவாக துளை என்றழைக்கப்படுகிறது. துளையில் இந்தப் பொருள்கள் குவிவதால் அடைப்பு ஏற்பட்டு, பின் ஆக்ஸிஜனேற்றமடைந்து கரும்புள்ளி வடிவத்தை எடுக்கிறது. பாக்டீரியாவின் படையெடுப்பின் காரணமாக, கரும்புள்ளிகள் தொற்று மற்றும் வீக்கமடைந்து வலி மற்றும் பிடிவாதமான முகப்பருவைத் தருகிறது. சருமத்தை உருவாக்கும் செபாசியஸ் சுரப்பிகள், அதிக சுறுசுறுப்பாக இருக்கும் பகுதிகளில் முகப்பரு ஏற்படுகிறது மற்றும் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தலாம்.
உடல் பருக்களைக் குணப்படுத்த வீட்டு வைத்தியம்
உடலில் முகப்பருவைக் குறைக்க மற்றும் சிகிச்சையளிக்கவும் உதவும் வணிகப் பொருள்களில் இரசாயனப் பொருட்கள் நிறைந்து ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க, உடல் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் உதவும் சில எளிய வைத்தியங்களைக் கையாளலாம்.
கற்றாழை
கற்றாழையில் நிறைந்துள்ள மருத்துவ பண்புகள் சரும நன்மைகளுக்கு உதவும் ஒரு பிரபலமடைந்த மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. கற்றாழையில் இயற்கையாகவே சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலில் பரு போன்ற பல்வேறு சரும நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதிலிருந்து ஜெல்லை வெளியே எடுக்க வேண்டும். பிறகு இந்த ஜெல்லை பாத்திரம் ஒன்றில் சேர்க்க வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லை மாய்ஸ்சரைசர் போல பாதிக்கப்பட்ட பகுதியில் லேசாக தடவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் குணமாகலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Underarms Home Remedies: அக்குள் கருமையைப் போக்க இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
தேயிலை எண்ணெய்
சமீப காலமாகவே தேயிலை எண்ணெய் மிகவும் பிரபலமடைந்த ஒன்றாகும். இது வணிக முகப்பரு சிகிச்சை தயாரிப்புகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறைந்துள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிவூட்டப்பட்ட தேயிலை மர எண்ணெய் முகப்பருவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நோய்த்தொற்றை உண்டாக்கும் முகப்பருவைக் கொன்று வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தேயிலை எண்ணெயை கிண்ணத்தில் எடுத்து அதில் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாகக் கிளறி, இந்தக் கலவையில் ஒரு காட்டன் பஞ்சில் ஊற வைக்க வேண்டும். இவற்றைப் பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக தடவுவதன் மூலம் முகப்பருவைக் குறைக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் அதிகளவிலான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் உடலில் தோன்றும் பருக்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஆனால், இந்த தீர்வை எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியாது.
தேங்காய் எண்ணெயைச் சிறிது எடுத்து உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்க வேண்டும். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் எண்ணெயை மெதுவாக தடவி விட்டு விடலாம். இதன் மூலம் பருக்கள் குணமாகலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tan Removing Remedies: பாதத்தின் கருமையை நீக்க இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
தேன்
தேன் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பருக்களை எதிர்த்துப் போராடவும், வேர்களில் இருந்து உடலில் தோன்றும் பருக்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. இது பல்வேறு சரும ஃபேஸ் பேக்குகளில் முதன்மை பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு 2 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டைத் தூளைச் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பின் பருக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதன் பிறகு வெற்று நீரில் கழுவி மென்மையான துண்டுடன் உலர வைக்க வேண்டும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் பூஜ்ஜிய அளவிலான கலோரிகள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள பருக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, இவை பருக்கள், வீக்கம், எரிச்சல் மற்றும் வயதான ஆரம்ப அறிகுறிகள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் சக்தி வாய்ந்த மூலப் பொருளாகக் கருதப்படுகிறது.
இதற்கு க்ரீன் டீ பேக்கை எடுத்து சிறிது கொதிக்கும் நீரில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு, அந்த பேக்கை வெளியே எடுத்து, தேநீர் முழுவதுமாக குளிர வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த தேநீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம். இதன் மூலம் பருக்களைக் குறைக்க முடியும்.
இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பருக்களைக் குணமாக்கலாம். இது தவிர பெட்ஷீட்கள், தலையணை உறைகள் மற்றும் ஆடைகளை தவறாமல் மாற்றுவது, அதிலும் குறிப்பாக வியர்வைக்குப் பிறகு சருமத்தில் எண்ணெய்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்க உதவுகிறது. இந்த எளிய பழக்கத்தின் உதவியுடன் முகப்பரு விரிவடையும் அபாயத்தைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Acne: முகப்பருவை குணப்படுத்தும் அற்புதமான வீட்டு வைத்தியம் இங்கே.!
Image Source: Freepik