Back Acne Remedies: முதுகு பருக்களால் அவதியா? ஒரே இரவில் பருக்களைக் குறைக்க இதுல ஒன்னு யூஸ் பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Back Acne Remedies: முதுகு பருக்களால் அவதியா? ஒரே இரவில் பருக்களைக் குறைக்க இதுல ஒன்னு யூஸ் பண்ணுங்க!


முதுகில் பருக்களை நீக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

வீட்டிலேயே எளிமையான முறையில் முதுகில் தோன்றும் பருக்களை நீக்க முடியும். இதில் முதுகு கொப்புளங்களை எளிதில் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வயிற்றுப்போக்கால் அவதியா? உடனே நிற்க இந்த ட்ரிங்ஸ் குடிங்க

கிரீன் டீ

பச்சை தேயிலை என்றழைக்கப்படும் கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இவை முகப்பருவை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.

இதற்கு முதலில் கிரீன் டீயை நன்கு காய்ச்சி ஆற வைக்க வேண்டும். பிறகு பருத்திப் பஞ்சு அல்லது ஸ்ப்ரே பாட்டிலின் உதவியுடன், முதுகில் தடவ வேண்டும். இதை 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு இதை கழுவி விடலாம்.

கற்றாழை

கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சிறந்த தாவரமாகும். கற்றாழையானது அதன் இனிமையான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். இவை எரிச்சலூட்டும் சருமத்தை அமைதியாக வைப்பதுடன், முகப்பருவுடன் தொடர்புடைய சிவத்தலைக் குறைக்கிறது.

இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து நேரடியாக முதுகில் தடவி, காயவிட்டு விட வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவி விடலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் ஆனது பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் pH-ஐ சமநிலையில் வைக்க உதவுகிறது. இதன் மூலம் முதுகில் உள்ள பருக்களைக் குறைக்கலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம பாகங்களாக எடுத்துக் கொண்டு, பிறகு இந்தக் கரைசலை பருத்தி பஞ்சு ஒன்றின் உதவியுடன் முதுகில் தடவ வேண்டும். பின், இதை 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு உலர வைக்கலாம். மேலும் உணர்திறன் வாய்ந்த சருமமாக இருப்பின், இதை நீர்த்த கரைசலுடன் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Tips: மஞ்சள் கறை பற்கள் சீக்கிரம் வெண்மையாக மாற இத ட்ரை பண்ணுங்க

மஞ்சள் பேஸ்ட்

மஞ்சளில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை பருக்கள், சொரியாசிஸ் உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் பேஸ்ட் தயார் செய்ய, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் அல்லது தேனைப் பயன்படுத்தி கலவையைத் தயார் செய்ய வேண்டும். பின் இந்தக் கலவையை முதுகில் தடவி அதை அப்படியே 10-15 நிமிடங்கள் வைத்து, பின் கழுவி விடலாம்.

தேயிலை மர எண்ணெய்

இது இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவுக்கு எதிராக மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது. ஆய்வின் படி, தேயிலை மர எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுவதுடன், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இதற்கு முதலில் தேயிலை மர எண்ணெயை ஜோஜோபா எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சேர்த்து நீர்த்துப்போகச் செய்ய வேண்டும். பிறகு பருத்தி பஞ்சு அல்லது துணியைப் பயன்படுத்தி பருக்கள் உள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இதை சில மணி நேரம் அல்லது ஓரிரவு அப்படியே வைத்து பின் கழுவி விடலாம்.

இவ்வாறு முதுகில் உள்ள பருக்களை எளிதாக இந்த வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் நீக்கலாம். எனினும், சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் எரிச்சல், சிவத்தல், எரிதல் அல்லது அரிப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Reducing Tips: நெஞ்செரிச்சல் டக்குணு சரியாகணுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Teeth Whitening Tips: மஞ்சள் கறை பற்கள் சீக்கிரம் வெண்மையாக மாற இத ட்ரை பண்ணுங்க

Disclaimer