$
How To Get Rid Of Blocked Nose Instantly At Night: மூக்கில் அடைப்பு ஏற்படுவது அனைவரும் சந்திக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதில் பலரும் அடிக்கடி சமாளிப்பர். இன்னும் சிலருக்கு இந்தப் பிரச்சனை அவர்களுக்கு அசௌகரியத்தைத் தரலாம். மேலும், மூக்கடைப்பு காரணமாக ஒரு நபரின் முழு தினசரி வழக்கமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் ஏற்படும் மூக்கடைப்பு ஆனது ஒருவரின் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம். மேலும், இதனால் கேட்பது, பேசுவது போன்றவற்றில் சிரமம் உண்டாகலாம். இதில் ஒருவர் அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனையைச் சந்திக்கும் போது, அவர்கள் குறட்டையை எதிர்கொள்கின்றனர். இதில் சில சமயம் இரண்டு நாசிகளும், சில சமயம் ஒரு நாசி மட்டும் அடைப்பு ஏற்படலாம்.
ஒரு பக்கம் மூக்கடைப்புக்கான காரணங்கள்
- பொதுவாக சளி, இருமல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும் மூக்கில் அடைப்பு ஏற்படலாம். மேலும் சில சமயங்களில் குளிர்ச்சி காரணமாக ஒரு மூக்கு மட்டுமே பாதிக்கப்படும் அபாயம் உண்டாகலாம்.
- இது தவிர நாசி குழியில் வீக்கம் இருக்கும்போது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி உருவாகத் தொடங்குகிறது. இந்த பிரச்சனையுடன் சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dust Allergy Remedies: தூசி ஒவ்வாமையால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
மூக்கடைப்புக்கான வீட்டு வைத்தியம்
அடைபட்ட மூக்கைச் சரி செய்ய சில இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இதில் மூக்கடைப்புக்கான வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
வெந்நீர் பயன்பாடு
மூக்கடைப்பு பிரச்சனையைச் சரி செய்வதற்கு உதவும் சிறந்த முறையாக வெந்நீரைப் பயன்படுத்தலாம். இதற்கு துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதை வெந்நீரில் நனைத்து, பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை அடைபட்ட மூக்கில் தடவ வேண்டும். இவ்வாறு மூக்கில் வெந்நீர் நனைத்த துணியைப் பயன்படுத்துவதன் மூலம் சளியை எளிதில் வெளியேற்றலாம். எனவே மூக்கடைப்புப் பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை வரை செய்யலாம். மூக்கைக் கழுவுவதுடன், வெந்நீரை தொண்டையில் நனைக்கலாம்.

நீராவி எடுப்பது
மூக்கில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது சளியால் நிரப்பப்பட்டாலோ அதற்கு நீராவி எடுக்கலாம். இந்த மூக்கடைப்பு பிரச்சனையை நீராவி மூலம் குணப்படுத்தலாம். தலையில் ஈரப்பதம் நிறைந்திருப்பின், அது நீர் கோர்த்தல் பிரச்சனையை உண்டாக்கலாம். இந்த தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனையைத் தவிர்க்க நீராவி எடுக்கலாம். இதில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் மஞ்சள் போன்ற நோயெதிர்ப்புப் பொருள்களைச் சேர்த்து நீராவி எடுக்கலாம்.
இவ்வாறு நீராவி எடுப்பதன் மூலம், சூடான காற்று மூக்கு மற்றும் தொண்டை வழியாக நுரையீரலை அடைகிறது. இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். எனவே நீராவி எடுப்பதன் மூலம் மூக்கைத் திறந்து சளியை வெளியேற்றலாம். மூக்கடைப்பு நீங்க ஒரு நாளை இரண்டு முதல் மூன்று முறை நீராவி எடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!
பூண்டு பயன்படுத்துதல்
மூக்கு அடைபட்ட பிரச்சனையிலிருந்து விடுபட பூண்டு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்கு 3 முதல் 4 பல் பூண்டை எடுத்து அதைத் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன், கருமிளகுத் தூள், மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து குடிக்கலாம். மூக்கடைப்பிலிருந்து விடுபட பூண்டு அதிக நிவாரணத்தைத் தர உதவுகிறது.
இஞ்சி பயன்பாடு
சுவாச அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மூக்கில் அடைப்பு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இஞ்சியை உட்கொள்வது சிறந்த தேர்வாகும். மேலும், இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது பிரச்சனையிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது. இதற்கு இஞ்சி துண்டுகளை உப்பு கலந்து சாப்பிடலாம். விரும்பினால், இஞ்சி தேநீர் அருந்தலாம்.

உப்பு பயன்படுத்துதல்
மூக்கடைப்பு பிரச்சனையை குணப்படுத்த உப்பு பெரிதும் உதவுகிறது. இதற்கு 2 கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது சில துளிகளை ட்ராப்பரின் உதவியுடன் மூக்கில் வைக்க வேண்டும். இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். இது சளியை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. மேலும், மூக்கடைப்பு சுத்தமாகவும் உதவுகிறது.
எனவே மூக்கடைப்பு பிரச்சனைகள் இருக்கும் சூழ்நிலையில், இது போன்ற வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். ஆனால், இது நீண்ட நாள்களாக நீடித்தால் கண்டிப்பாக ஒரு முறை மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் மூக்கடைப்பு பிரச்சனையானது வேறு சில உடல்நல பிரச்சனைகள் காரணமாகவும் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Foot Pain Remedies: பாத வலி சீக்கிரம் சரியாகணுமா? இந்த வைத்தியங்களை டிரை பண்ணுங்க
Image Source: Freepik