Doctor Verified

Acid Reflux Reducing Tips: நெஞ்செரிச்சல் டக்குணு சரியாகணுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Acid Reflux Reducing Tips: நெஞ்செரிச்சல் டக்குணு சரியாகணுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க


How To Reduce Acid Reflux Instantly: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு கடுமையான நோய்கள் ஏற்படலாம். இவை வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது உணவு மற்றும் வாழ்க்கை முறை சீர்குலைவுகளால் ஏற்படும் தீவிர பிரச்சனையாகும். இது செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனையாகும்.

இதில் வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலமானது வயிற்றிலிருந்து மேலே நகர்ந்து தொண்டை வலி மற்றும் எரிச்சல் உட்பட பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என அழைக்கப்படுகிறது. இதனால் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதை உடனடியாக குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Dental Care: பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வீட்டிலேயே எளிமையாக பல் பொடி செய்யலாம்!

ஆசிட் ரிஃப்ளக்ஸைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமில வீச்சு பிரச்சனையைக் குணப்படுத்த உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். இதிலிருந்து விடுபட மருந்துகளை உட்கொள்வதுடன், உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதும் அவசியமாகும்.

ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர்.வி.டி. திரிபாதி அவர்கள் கூறுகையில், ”ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஒரு தீவிர பிரச்சனையாகும். இதைக் குணப்படுத்தாவிடில் பல்வேறு தீவிர பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். அதன் படி, புற்றுநோய் மற்றும் செரிமான அமைப்பு பிரச்சனைகளை அதிகரிக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ் கட்டுப்படுத்தும் முறைகள்

அமில வீக்கம் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸை உடனடியாகக் குணப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

வெதுவெதுப்பான நீரை அருந்துதல்

நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துவதற்கான எளிய மிகவும் பயனுள்ள வழி வெந்நீர் குடிப்பதாகும். அமில வீக்கத்தின் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை மெதுவாகக் குடிப்பது அமில வீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது அமிலத்தன்மையை குறைக்கிறது.

புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் அமில வீக்க பிரச்சனை ஏற்படலாம். எனவே அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் புகைபிடித்ததைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Blocked Nose:மூக்கடைப்பா?… இந்த எளிய வீட்டு வைத்தியங்கள பாலோப் பண்ணுங்க!

சோடா தண்ணீர் குடிப்பது

திடீரென அமில வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் சிறிது சோடா கலந்த நீரை ஒரு ஸ்பூன் அளவு குடிக்கலாம். இது அமில சமநிலையை பராமரிப்பதுடன், அமிலத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி செய்வது

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் அமில வீச்சைக் குறைக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் உண்பது

சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை உண்பது அமில வீச்சிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. சிறிது உப்பு கலந்து மென்று சாப்பிடுவதன் மூலம் அமில வீச்சைக் குறைக்கலாம்.

ஆரோக்கியமான உணவுமுறை

புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆசிட் ரிளக்ஸைக் குறைக்க முடியும். வெள்ளரி, புதினா மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இவை அனைத்தும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைக் குறைக்க உதவும் நடவடிக்கைகளாகும். அதன் பின்னரும், இந்த பிரச்சனை தொடர்ந்தால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும். மேலும் புதிதாக எதையும் தொடங்கும் முன் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்

Image Source: Freepik

Read Next

Feet Swelling Remedies: கால்கள் அடிக்கடி வீங்கி வலி வருதா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்