Expert

Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்

  • SHARE
  • FOLLOW
Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்

எனினும், மலச்சிக்கல்லைப் போக்க சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. இதைப் பின்பற்றுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இதில் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட ஆலிவ் எண்ணெய் மற்றும் புதினா டீ பயன்படுத்துவது குறித்து டெல்லியின் எக்சென்ட்ரிக் டயட்ஸ் கிளினிக் டயட்டீஷியன் ஷிவாலி குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Karpooravalli Leaf For Cold: சளி, இருமல் பிரச்சனைக்கு கற்பூரவள்ளி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க

மலச்சிக்கல்லை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

புதினா டீ

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட விரும்புபவர்கள், தினமும் ஒவ்வொரு உணவிற்குப் பிறகு சூடான புதினா டீ அருந்தலாம். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். இதற்கு புதினா டீ ஆனது, கார்மினேடிவ் மற்றும் குடல் செயல்பாட்டைத் தூண்டுவதே காரணமாகும். இந்த டீயைத் தொடர்ந்து குடித்து வருவது, வயிற்றை சுத்தப்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுபட வைக்கிறது. மேலும் புதினா டீ அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளையும் குறைக்கிறது.

தயாரிக்கும் முறை

புதினா டீ தயார் செய்ய, பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீருடன் சில புதினா இலைகளைக் கொதிக்க வைக்க வேண்டும். பின் தண்ணீர் கொதித்த பின்னர், அதை வடிகட்டி, சூடாக குடிக்கலாம். சுவைக்காக தேநீருடன் தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த டீயை 2 முதல் 3 முறை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Castor Oil For Eyes: கண்பார்வை நல்லா தெரிய மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்கும் விளக்கெண்ணெய் ஒன்னு போதும்

ஆலிவ் எண்ணெய்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு தினமும் காலையில் ஆலிவ் எண்ணெயை உட்கொள்ளலாம். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதனை உட்கொள்வதன் மூலம் மலம் மென்மையாகி, குடல் உயவூட்டப்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது. இதை அதிகளவு உட்கொள்வது வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த சூழ்நிலையில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், மருத்துவரை அணுகுவது நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனை தீர ஆலிவ் எண்ணெய் மற்றும் புதினா டீ பயன்படுத்துவது பாதுகாப்பானதாகவும், இயற்கையான தீர்வாகவும் கருதப்படுகிறது. எனினும் நீண்ட காலமாக மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின், மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: அசிடிட்டியை போக்க இந்த 2 பொருள் போதும்..

Image Source: Freepik

Read Next

Homemade Baby Cream: குழந்தைக்கு ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?

Disclaimer