Constipation Solution: துரித உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்டவை காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. பலர் வாரத்தில் 4-5 நாட்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரமிதா கவுர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம். சிம்பயோடிக் உணவுகள் குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும், இதற்கு ஹோம்செட் தயிர், திராட்சை ஒரு நல்ல வழியாகும் என கூறியுள்ளார்.
திராட்சை தயிர் செய்ய தேவையான பொருள்

பால்- 1 கப்
திராட்சை- 5 முதல் 6
தயிர்- ¼ தேக்கரண்டி
திராட்சை தயிர் செய்முறை
திராட்சை தயிர் செய்ய ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் ஊற்றவும்.
அதன்பின் 5 முதல் 6 கருப்பு திராட்சைகளைச் சேர்க்கவும், உங்களிடம் கருப்பு திராட்சை இல்லை என்றால், சாதாரண திராட்சைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதில் ¼ ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
இதை மூடிவைத்து துணியில் போர்த்தி உறையும் வகையில் சூடான இடத்தில் வைக்கவும்.
தயிர் திராட்சையை எப்போது சாப்பிட வேண்டும்?
தயிர் மற்றும் திராட்சைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை செரிமான அமைப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் திராட்சை தயிர் சாப்பிடும் நேரம் என்பதும் முக்கியமான ஒன்று.
இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் காலை அல்லது மதியம் திராட்சை தயிர் சாப்பிடலாம். விரும்பினால் மாலை நேர சிற்றுண்டியின் போதும் சாப்பிடலாம். ஆனால் நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
தயிர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலில் கால்சியம் குறைபாட்டை நீக்குவதில் நன்மை பயக்கும்.
மூட்டு தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதன் மூலம் முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க இது உதவும்.
உடலின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படிங்க: காய்ச்சல் மற்றும் இருமலுடன் போராட்டமா.? இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க.!
Pic Courtesy: FreePik