$
Castor Oil For Improving Vision: முதுமை நிலையை அடையும் ஒவ்வொருவரும் சந்திக்கும் உடல் நல மாறுபாடுகளில் கண்களும் ஒன்று. இதில், கண்கள் பலவீனமாகி பார்வைத் திறனை இழக்க நேரிடலாம். இது பார்வையின் பலவீனம் என அழைக்கப்படுகிறது. இது தவிர, கண்புரை பிரச்சனை காரணமாகவும் சில நேரங்களில் பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.
கண்களில் ஏற்படும் கண்புரை பிரச்சனையில், ஃப்ரீ ரேடிக்கல்களால் கண்களின் விழித்திரை சேதமடையலாம். இந்த பார்வைக் குறைபாடு மற்றும் கண்புரை பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் தவறான உணவுப்பழக்கம் மற்றும் நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்
கண்புரை ஏற்பட காரணங்கள்
இன்றைய உணவு முறையில் பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றின் நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு நபர் தேவையான அனைத்து ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்களைப் பெற முடியாமல் போகலாம். இதனால் சிறு வயதிலேயே கண்புரை, பார்வைக் குறைபாடு போன்ற பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அல்லது ஃப்ரீ ரேடிக்கல்களால் கண்களில் சேதம் ஏற்படுவது கண்புரை என அழைக்கப்படுகிறது.
கண்களின் லென்ஸானது புரதத்தால் ஆனதாகும். இந்த லென்ஸின் புரதம் ஆக்ஸிஜனேற்றத்தால் சேதமடையும் போதே கண்களின் பார்க்கும் பாதிக்கப்படுகிறது. இந்த செயல்முறை கிளைகேஷன் என அழைக்கப்படுகிறது.

கண்களுக்கு விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயைக் கண்களுக்கு பயன்படுவது பார்வைக் குறைபாட்டை நீக்குவதுடன், கண்புரை பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கை அல்லது வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், மருத்துவ ஆலோசனையில் பிரச்சனையின் மூலக் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு மருத்துவரின் பரிந்துரையில் விளக்கெண்ணெயைப் பயன்படுத்தலாம். கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால், சந்தையில் கிடைக்கும் இரசாயன எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக ஆர்கனிக் மற்றும் குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களை மட்டும் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க.
எப்படி உபயோகிக்கலாம்?
கண்களுக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவது கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- இதற்கு இரவு தூங்கும் முன்னதாக பாதிக்கப்பட்ட கண்ணில் ஒரு துளி ஆமணக்கு எண்ணெயை வைக்கலாம்.
- பின் காலையில் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவிக் கொள்ளலாம். ஒவ்வொரு இரவும் இந்த முறையைச் செய்யலாம்.
- இவ்வாறு 3 நாள்களுக்குள் எந்த விளைவையும் காணவில்லை எனில் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்த்து மருத்துவரை நாடுவது நல்லது.
- அதே சமயம் கண் பார்வையில் சில மாற்றங்களைக் கண்டால், இதை 4 முதல் 6 வாரங்களுக்குப் பயன்படுத்தலாம்.

குறிப்பு
- கண்கள் ஏற்கனவே சிகிச்சையில் இருப்பின், மருத்துவ ஆலோசனை இல்லாமல் இந்த எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- கண்களில் எண்ணெய் வைக்க ஒரு துளியைப் பயன்படுத்த வேண்டும்.
- ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் 1 துளி எண்ணெய் சேர்க்கவும்.
- கண்களில் இந்த விளக்கெண்ணெயைப் பயன்படுத்திய பிறகு சிறிது நேரம், பார்வை மங்கலாக இருக்கும். எனவே இதை இரவில் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Aloevera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik